மும்பைக்கு எதிரான IPL போட்டியில் கேப்டன் லோகேஷ் ராகுல் அரைசதம்

Pradeepa 2 Views
2 Min Read

ஹைலைட்ஸ் :

  • மும்பை அணியின் கேப்டன்,ரோஹித் சர்மா, 52 பந்துகளில் 5 பவுண்டரி , 2 சிக்சர்களை அடித்து 63 ரன்கள் எடுத்து டப் குடுத்தார்.
  • கிறிஸ் கெயில் சிக்சர் ,பவுண்டரி என பந்துகளை பறக்கவிட்டார்.
  • நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி தன்னுடைய 2வது வெற்றியை தொட்டது.
  • 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின், 17 வது லீக் போட்டியானது சென்னை எம். எ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததால், மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களதில் இறங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக டி காக்-ரோஹித் சர்மா இருவரும் கைகோர்த்ததில் டி காக் 3 ரன்கள் மட்டுமே எடுத்து களத்தை விட்டு வெளியேறினார். அதன் பின் களம் இறங்கிய இஷான் கிஷன் 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்ததாக களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 33 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் .

கடைசி வரை நின்று ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா பந்துகளை விளாசினார். அவர் 52 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களை அடித்து 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய ஹார்திக் பாண்டிய 1 ரன் மற்றும் குர்னால் பாண்டிய 3 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடரந்து ஆடிய பொல்லார்ட் 12 பந்துகளில் ,16 ரன்களை குவித்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது. அதை தொடர்ந்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.

அணியின் தொடக்க வீரர்களாக கே. எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் இணைந்து களம் இறங்கினர். இதில் மயங்க் அகர்வால் 25 ரன்களில் வெளியேற அடுத்து கிறிஸ் கெயில்களமிறங்கினார். கே. எல். ராகுல், கிறிஸ் கெயில் இருவருக்குமான பார்ட்னர்ஷிப்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ராகுல் அரை சதம் எடுத்து அசத்த, கெயில் இறுதிகட்டத்தில் சிக்சர் பவுண்டரி என பந்துகளை பறக்கவிட்டார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடினர். இறுதி கட்டத்தில் பஞ்சாப் அணி 17.4 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 132 ரன்களை எடுத்து வெற்றி அடைத்தனர். நேற்றைய போட்டியின் விளைவாக பஞ்சாப் அணி தன்னுடைய 2வது வெற்றியை தொட்டது.

Share This Article
Exit mobile version