இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் எவர்கிரீன் கேப்டன் என புகழப்படும் மகேந்திர சிங் தோனி நாற்பதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். கூல் கேப்டன் தோனியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நான் இறப்பதற்கு முன் 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி அடித்த சிக்ஸர் ஐ பார்க்க ஆசைப்படுகிறேன் என்றார் சுனில் கவாஸ்கர். என் பக்கம் தோனி இருந்தால் போரையும் சந்திக்க தயார் என்றார் கியரி கிருஸ்து. சாமானியர்கள் முதல் ஜாம்பவான்கள் வரை ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமும் வியந்து பார்க்கும் வீரர்கள் சொர்க்கம்.
பொதுவாக இந்திய கிரிக்கெட்டில் கோலோச்சிய வீரர்கள் பெரும்பாலும் பெருநகரங்களை சேர்ந்தவர்கள் ஆனால் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஜீவ் என்ற ஒரு சிறு நகரத்தில் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த தோனி ஆரம்பத்தில் ரயில்வேயில் டிக்கெட் கலெக்டர் ஆக பணிபுரிந்தார். கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தினால் வேலையை துறந்து கிரிக்கெட்டை முழு மூச்சாக காதலித்தார். துடிப்பும், இளமையும் மிகுந்த ஆட்டத்தால் முதல்தர போட்டிகளில் அடுத்தடுத்து சதங்கள் விளாசி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்த தோனிக்கு இந்திய அணியில் கதவு திறக்கப்பட்டது.
நீளமான முடி வலுவான உடற்கட்டு தீர்க்கமாக கண்களுடன் 2004 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான போதே கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து விட்டார் தோனி. கேப்டன் தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலம் தான் இந்தியாவின் பொற்காலம் அப்போது தான் இந்தியா முதன்முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது. ICC சார்பில் நடத்தப்படும் அனைத்து கோப்பைகளையும் இந்திய அணிக்கு பெற்று தந்த பெருமை கூல் கேப்டன் தோனியை சாரும்.
விக்கெட் கீப்பர் தோனி, பேட்ஸ்மேன் தோனியை விட கேப்டன் தோனிதான் எல்லோருக்கும் பிடித்த நபர். நெருக்கடியான நேரத்தில் நிதானமாக அவர் எடுக்கும் முடிவுகள் இந்திய அணியை வெற்றி மகுடம் சூட வைத்து உள்ளது. 2009 T20 உலக கோப்பை பைனலில் கடைசி ஓவரை ஜோகிந்தர் சர்மாவுக்கு கொடுத்தது 2011 ஒரு நாள் உலக கோப்பை இறுதி போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு முன்பக்க தானே காலம் இறங்கியது என அவர் எடுத்த துணிச்சலான முடிவுகள் பாராட்டுக்களைப் பெற்றது. நெருக்கடியான நேரத்திலும் எந்த வித தயக்கமும் அடையாமல் அதே நேரத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் தான் ரசிகர்கள் அவரை கேப்டன் கூல் என புகழ்கிறார்கள்.
அணி வெற்றி பெறும் நேரத்தில் கோப்பையை சக வீரர்களிடம் கொடுத்து விட்டு ஓரமாக நின்று கொள்வதும் அணி தோல்வி அடைந்தால் தோல்விக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வதும் தோனியின் இயல்பு. தோனியின் இரண்டாம் வீடு சென்னை. தோனி இல்லாததை CSK வை நினைத்து பார்க்கவே முடியாது. அவரது தலைமையில் தான் CSK மூன்று முறை IPL சாம்பியன் பட்டம் வென்றது. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்ட வீரர்களுக்கு பக்கபலமாக இருந்ததோடு அங்கிள் அணி என்று கேலி செய்யப்பட்ட அணியை வைத்தே சாம்பியன் பட்டம் வென்று காட்டியவர் தோனி.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் முதல் மறைந்த திமுக தலைவர் கலைஞர் வரை தோனியின் ரசிகர்களே. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு அறிவித்தபோது அவருக்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி இளைஞர்களுக்கு தோனி என்றுமே ஒரு முன்னுதாரணம் என்று புகழாரம் சூட்டினார். அன்பான மனைவி அழகான குழந்தைகள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வரும் தோனியின் அடுத்த இன்னிங்ஸ் என்னவென்பதை ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்திய கிரிக்கெட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய தோனியின் கதை வரலாற்றில் ஒரு மாவீரனின் கதையாக, தலைவனின் கதையாக,வெற்றியாளரின் கதையாக பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படும்.
கூல் கேப்டன் தோனியின் பிறந்தநாளில் அவரை கவுரவிக்கும்வகையில் ICC தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “கேப்டன் கூல்” என வர்ணித்து வீடியோ வெளியிட்டுள்ளது.
வீடியோவை பார்க்க: https://twitter.com/ICC/status/1412592453417242625?s=20