அரிசி சாதத்தால் சர்க்கரை நோய் வருமா?

Pradeepa 25 Views
1 Min Read

சர்க்கரை நோய் அரிசி சாதம் சாப்பிட்டால் வரும் என்ற கருத்து தவறானது.  நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தன முக்கியம்.  சாப்பிடும் உணவுக்கேற்ற உடல் உழைப்பு இருக்க வேண்டும்.  அவ்வாறு உடல் உழைப்பு இருந்தால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு.

கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது.  அதனால் முடிந்தவரை குக்கரில் சாதம்  வைக்காமல் கஞ்சியை வடித்து சாப்பிடுவது நல்லது.

சாதம் வடித்த கஞ்சியை ஆற வைத்து குடித்தால் வாயு தொல்லை ஏற்படும்.  அதனால் இந்த கஞ்சியை கொஞ்சம் சூடாக இருக்கும்போதே  சிறிது உப்புபோட்டு குடித்தால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை குணமாகும்.

சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் சாப்பிடுவதால்  உடலுக்கு குளிர்ச்சியும் வலிமையும் தரும். மற்றும் வயிற்று கோளாறு, மூட்டுவலி, அல்சர் போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கும். பழைய சாதத்தில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது  மோர் ஊற்றி சாப்பிடலாம்.

சாதம் வெதுவெதுப்பாக இருக்கும்போது பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர் தாகம், பித்தம் உண்டாகுவதை தவிர்க்கலாம்.  பச்சரிசி சாதத்தில் பல் சேர்த்து சாப்பிட்டால் வாதம், பித்தம் நீங்கும்.

வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிட்டால் தொப்பையைக் கரைக்கும்.

TAGGED:
Share This Article
Exit mobile version