தமிழ்நாடு புதுசேரி இடையிலான பேருந்து சேவை இன்று தொடங்கியது

Pradeepa 9 Views
1 Min Read

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு புதுச்சேரி இடையே 70 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததால் தமிழ்நாடு புதுச்சேரி இடையிலான பேருந்து போக்குவரத்து சேவை இன்று தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புதுசேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசின் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி பயணிகள் முக கவசம் அணிந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரியில் இருந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது.

அதன்படி இன்று முதல் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டுமே ஏற்று அனுமதிக்க வேண்டும் என்று ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி

Share This Article
Exit mobile version