இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்

Vijaykumar 1 View
1 Min Read

இன்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார்.

கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஏற்பாடுகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

இந்நிலையில் காலை 10 மணிக்கு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அவையில் தாக்கல் செய்கிறார் .

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகித பயன்பாடு இல்லாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது .

இதற்காக அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் இருக்கை கணினி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்துடன் கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கை வாசிக்கும் போது அதில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் கணினியில் தெரியும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இன்று பொது நிதிநிலை அறிக்கையும் நாளை வேளாண்துறை கால தனி நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது இந்த இரண்டு நிதிநிலை அறிக்கைகள் தொடர்பான விவாதங்கள் வருகிற திங்கட்கிழமை முதல் நடைபெறுகிறது

Share This Article
Exit mobile version