29 நாட்கள் நடைபெறும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்

1 Min Read

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 13-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21-ஆம் தேதி வரை 29 நாட்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவும் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ள சட்டப்பேரவைத் அப்பாவு தலைவர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு வரும் 13ஆம் தேதி தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையும், 14ஆம் தேதி வரலாற்றில் முதன்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறினார்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீது வரும் 16ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை விவாதம் நடைபெறும் 19ஆம் தேதி நிதி அமைச்சர் மற்றும் வேளாண் அமைச்சர் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். 23-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 21ஆம் தேதி வரை மானிய கோரிக்கைகள் துறைவாரியாக தாக்கல் செய்யப்பட்டு அவற்றின் மீது விவாதம் நடைபெறும். 23ஆம் தேதி நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும்.

Share This Article
Exit mobile version