- நீலநிற நிறம் கொண்ட, ஐஸ்கிரீம் சுவையில் ப்ளூ ஜாவா வாழைப்பழங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
- வாழைப்பழம் அதிக ஆரோக்கியம் மற்றும் சத்து நிறைந்த பிரபலமான பழங்களில் ஒன்று .அனைத்து மக்களாலும் உலகளவில் அதிகமாக விரும்பி சாப்பிடப்பட்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக ஒரு புதிய வகை வாழைப்பழத்தை பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது.
- கற்பூரவள்ளி, மோரிஸ், பச்சை வாழை, பூம்பழம், ரஸ்தாளி, செவ்வாழை என்று பல வாழைப்பழ வகைகள் உள்ளது. ஒவ்வொரு பழமும் தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
- மேலும்,செவ்வாழை மற்றும் பச்சை வாழை தவிர்த்து மற்ற அனைத்து வகைகளும் மஞ்சள் நிற தோலை கொண்டிருக்கும் என்பது அனைவர்க்கும் தெரித ஒன்றே .
- ஆனால், சமீபத்தில் நீலநிற நிறம் கொண்ட ப்ளூ ஜாவா வாழைப்பழங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தோல் மட்டுமல்லாமல் பழம் முழுவதுமே நீல நிறத்தில் இருப்பது தான் ஆச்சர்யம்.
- தற்போது இணையத்தில் இந்த பழத்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் இது ஐஸ்கிரீம் போன்ற சுவையுடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
- மேலும், அவை வெண்ணிலா ஐஸ்கிரீம் போன்ற சுவையுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவற்றைக் கொண்டு டெசர்ட் செய்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும்.
- இருப்பினும், இந்த வாழைப்பழங்கள் மிகவும் அரிதான ஒன்று . அவை எளிதாக எல்லா இடங்களிலும் காணப்படுவதில்லை. அவை பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தைக் கொண்டிருக்கும்.
- தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் இந்த வகை வாழைப்பழங்கள் வளர்க்கப்படுகின்றன. அதேபோன்று ஹவாய் பகுதிகளிலும் நன்கு வளரக்கூடியவை ஆகும்.
- இந்த அரியவகை வாழைப்பழம், மூசா பால்பிசியானா மற்றும் மூசா அக்யூமினாட்டா என்ற இரண்டு வகையான வாழைப்பழங்களின் கலப்பினமாகும்.
- அதிக குளிர்ச்சியை தங்குவதால் உறைபனிக்குக் கீழே உள்ள வெப்பநிலையில் கூட வளரக்கூடி அதிசிய வகை பழங்களாக உள்ளது. ஆனால் 40F தான் அவற்றின் வளர்ச்சிக்கு ஏற்ற வெப்பநிலை ஆகும்.
- சமீபத்தில், யூசர் தாம் கை மெங் என்பவர், இந்த அரியவகை வாழைப்பழம் குறித்து தனது ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார்.