இந்தியாவில் கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கரும்பூஞ்சை நோய் தொற்று ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருப்பு பூஞ்சை நோய் தொற்றை தொடர்ந்து வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரே முகக்கவசத்தை நீண்ட காலம் பயன்படுத்துவது போன்றவற்றால் கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவுவதாக நிபுணர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் அதிக அளவு ஸ்டிராய்டு மருந்தை பயன்படுத்துவது, சுத்தப்படுத்தாமல் மருத்துவ உபகரணங்களை பயன்படுத்துவது, ஒரே முகக்கவசத்தை நீண்ட காலம் பயன்படுத்துவது, படுக்கையை நீண்ட காலம் பயன்படுத்துவது போன்றவற்றால் இவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பரவுவதாக நிபுணர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்.
இதுவரை இந்தியாவில் 11,517 பேர் கறுப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு கண்றியப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தில் 236 பேர் கறுப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.