‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ

Pradeepa 11 Views
1 Min Read

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ஷோகளில் பிக் பாஸ் நிகழிச்சி ஒன்றாகும். பிக் பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்துவிட்ட நிலையில் இன்னும் சில மாதங்களில் பிக் பாஸ் சீசன் 5 நிகழிச்சி தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இதற்கு முந்தய ஷோகளில் கலந்து கொண்ட பிரபலங்களை வைத்து ‘பிக் பாஸ் ஜோடிகள்’ என்ற புதிய நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி தொடங்க உள்ளது.இந்த நிகழ்ச்சியில் முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட அனைத்து பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகர் ‘நகுல்’ மற்றும் ‘ரம்யா கிருஷ்ணன்’ கலந்து கொண்டு உள்ளனர். இவர்கள் இருவரும் இணைத்து இருக்கும் போட்டோ ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ரம்யா கிருஷ்ணன் பாகுபலி ராஜமாதா வசனத்துடன் செட்டுக்குள் நுழைகிறார். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி ஆட்டம் பாட்டம் கொண்டதுடன் ஆரம்பம் ஆவது ரசிகர்கள் இடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இந்த புதிய நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு வரம் தோறும் ஒளிபரப்பாக உள்ளது. பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி எப்படி இருக்க போகிறது என்பதை அறிய மக்கள் ஆர்வத்துடன் காத்து இருக்கின்றனர்.

Share This Article
Exit mobile version