பகவத் கீதை பொன்மொழிகள்

Vijaykumar 177 Views
4 Min Read

இந்துக்களின் புனித நூல்களில் ஒன்றான பகவத் கீதை பொன்மொழிகள்

பகவத் கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதி. பகவத் கீதை என்பது கடவுள் சோகம். இது இந்து மதத்திற்கான அடிப்படை பரலோக புனித நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பாண்டவ ஆட்சியாளரான அர்ஜுனனுக்கும் அவரது வழிகாட்டி மற்றும் விஷ்ணுவின் அடையாளமான தேரோட்டியான கிருஷ்ணனுக்கும் இடையிலான பரிமாற்றத்தின் கதை அமைப்பில் கீதை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது தமிழில் பகவத் கீதை பொன்மொழிகள் பார்ப்போம்.

உங்கள் வாழ்வானது…
உங்கள் எண்ணப்படியே அமையும்…
எண்ணத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள்…!

 

கீதாசாரம்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய் எதற்காக அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
“இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்”

 

யாராவது உன்னை ஒதுக்கி வைத்தால் கவலை ஏன்
யார் உன்னை எந்த தூரத்தில் வைக்கிறாரகளோ
அந்த தூரத்தில் வாழ கற்றுக்கொள்
அதனால் ஒ௫ நஷ்டமும் இல்லை
உன்னோடு தான் நான் இ௫க்கிறேன் அது போதாதா.

 

நீ எதிர் பார்க்கும் பாசம் ஓரிடத்தில் தடை பட்டால்,
அதனால் ஏற்படும் வலி அதிகம் தான்.
ஆனால்…! அதை நீ…!
உன்னை பக்குவபடுத்த பயன்படுத்தி கொள்.
கடினம் தான் ஆனால் இதுவே நிரந்தரம்…!!

 

காலங்கள் மாறினாலும்,
காட்சிகள் மாறினாலும்,
தான் கொண்ட
லட்சியத்தை மட்டும்
மாற்றக்கூடாது…

 

எதிர்ப்பார்ப்புகள் சில நேரங்களில்
ஏமாற்றங்களையே தரும்.
கடமையை செய்து
பலனை எதிர்ப்பராமல் இருப்பதே
அநேக அற்புதங்களுக்கு வழிவகித்திடும்.

 

சில நேரங்களில் நாம்
சரியான இலக்கை தீர்மானிக்கின்றோம்.
ஆனால் தவறான இலக்கை சென்றடைகிறோம்.
ஒவ்வொரு செயலையும் சிந்தித்து செயல்படுத்துங்கள்.

எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத்திற்காக நடக்கின்றது.
உங்களுக்கு நல்லது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது.
தீயது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது.

 

உங்களிடம் இல்லாதவற்றை நினைத்து
கவலை கொள்வதை விடுத்து
கிடைத்தவற்றை வைத்து பொறுமை கொண்டால்
உங்கள் வாழ்வு சிறப்பானதாக இருக்கும்.

 

புகழ் பூத்த பெருமைகளுடன்
மக்கள் மன்றத்தில் நாயகனாய்ப் போற்றப்படுபவன்
இழிசெயல்களில் ஈடுபட்டு மானத்தை இழக்க நோ்ந்தால்
அந்த நிலை மரணத்தைவிட மோசமானது.

 

நல்லவை முதலில் நரகமாக தோன்றும்
முடிவில் சொர்க்கமாக மாறிவிடும்
தீயவை முதலில் சொர்க்கமாக தோன்றும்
முடிவில் நரகமாக மாறிவிடும்

 

பகவத் கீதை பொன்மொழிகள்

உங்கள் வாழ்க்கையானது
எண்ணப்படியே அமையும்..
எண்ணத்தை எப்போதும்
தூய்மையாக வைத்திருங்கள்

சந்தர்ப்பமும் சூழ்நிலையும்
நல்லவர்களை கெட்டவர்களாக்கி
கெட்டவர்களை உத்தமர்களாக்கி
நிற்க வைத்து விடும்.. ஆனால்
உண்மை ஒருநாள் உலகறிய
வெளிவந்தே தீரும் அப்போது
யார் யார் எப்படி என்ற
மாயை விலகும்.

காமம், கோபம், பேராசை என்ற
மூன்று கதவுகளை கொண்டது
நரகம். இவை ஆத்மாவை
அழிப்பவை. எனவே இம்மூன்றையும்
விலக்க வேண்டும்.

உண்பதிலும் நடமாடுவதிலும்
தூங்குவதிலும் விழித்திருப்பதிலும்
அளவோடு இருப்பவன் துன்பம்
இல்லாமல் இருப்பான்.

காலங்கள் மாறினாலும்
நம் நிலைகள் மாறினாலும்..
நாம் கொண்ட இலட்சியத்தை
ஒருபோதும் மாற்றக்கூடாது.

உன் தோழனை அளவாக நம்பு
ஒரு நாள் அவன் உன் எதிரி
ஆகலாம். உன் பகைவனை
அளவோடு வெறு அவன்
ஒரு நாள் உனக்கு தோழனாக
மாறலாம்.

பெற்ற தாய் தந்தையை கைவிட்டவன்
எத்தனை தான தர்மங்கள் செய்தாலும்
வீண்.. அவன் செய்யும்
பிராத்தனைகளை இறைவன்
ஏற்பதில்லை.

சிக்கனம் என்பது பணத்தை
குறைவாக செலவு செய்வது அல்ல..
சிக்கனம் என்பது எவ்வளவு
பயனுள்ளதாக செலவிடுகிறோம்
என்பதை பொறுத்தது ஆகும்.

பெருமையோ இகழ்ச்சியோ தானாக
வருவதில்லை. உங்கள் கடமையை
செய்யுங்கள் எல்லாமே அதில்தான்
அடங்குகின்றன.

வாழ்வில் அனைத்தையும்
இழந்துவிட்டோம் என்று
நினைக்கும் போது ஒன்றை
மறக்காதீர்கள்.. எதிர்காலம்
என்ற ஒன்று நிச்சயம்
உள்ளது என்பதை.

செய்வினை என்பது நிச்சயமான
ஒன்று. நீங்கள் யாருக்கு எதை
செய்தாலும் அது இரட்டிப்பாக
திரும்ப கிடைக்கும்.
அது நன்மையாக இருந்தாலும் சரி.
தீமையாக இருந்தாலும் சரி.

தனியாக இருப்பதாக
கவலை கொள்ளாதே.. இறைவனே
உன்னுடன் இருக்கிறான் என்பதை
நினைவில் கொள்.

உன்னை யாரவது
அவமானப்படுத்தினால்
மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதே
நீ தூக்கி எறியப்படும் போது இறைவன்
உன்னை தூக்கி விடுகிறான் என்பதை
மறந்து விடாதே.

நீ பிறரிடம் எதிர்பார்க்கும் அன்பு..
மரியாதை.. போன்றவைகளை
பிறர் எதிர்பார்க்கும் முன் அதை
அவர்களுக்கு கொடுத்தால்
உனக்கானது (அன்பு, மரியாதை)
உன்னை தேடி வரும்.

மனத்தெளிவு பெற்றவனிடமிருந்து
எல்லா துக்கங்களும்
விலகுகின்றன.

உனக்கு உதவி செய்தவரை
உன் வாழ்வில் எப்பொழுதும்
மறக்காதே.

உன் மீது தவறு இருக்கும் போது
அடுத்தவர் மீது கோபம்
கொள்ளாதே.

எந்த உயிர்கள் மீதும் வெறுப்பு
இல்லாமல் எல்லா உயிர்களிடத்திலும்
அன்பும் கருணையும் உடைய
ஒருவன் எனக்கு மிகவும்
பிரியமானவன்.

எதை நீ அதிகம் விரும்புகிறாயோ..
அதை நீ விரைவில் வெறுப்பாய்.

எதிர்பார்ப்புகள் சில நேரங்களில்
ஏமாற்றங்களையே தரும்.
கடமையை செய்து பலனை
எதிர்பாராமல் இருப்பதே
அநேக அற்புதங்களுக்கு
வழிவகுத்திடும்.

 

Share This Article
Exit mobile version