காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Pradeepa 33 Views
2 Min Read
  • கோடையில் வெய்யிலில் சின்னம்மை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதை தடுக்கவும் வந்த சின்னம்மை விரைவில் குணப்படுத்தவும் நுங்கு உதவும். நுங்கு சாப்பிடுவதன் மூலம் சின்னம்மையினால் ஏற்படும் அரிப்புகளை தடுக்கும் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவும்.
  • முடி உதிர்ந்த பகுதியில் பிஞ்சு ஊமத்தின் காயை அரைத்து பூச புதிய முடி வளரும்.
  • அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவதால் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது.
  • வாரம் இருமுறை வேப்பம் பூவை ஏதாவது ஒரு வகையில் சாப்பிட்டு வர ரத்த சோகை நீங்கும்.
  • வயிற்றுப்போக்கு நிற்க ஒரு ஆப்பிள் ,கால் டீ ஸ்பூன் சுக்கு சேர்த்து அரைத்து 2 வேளை சாப்பிடலாம்.
  • கர்ப்பிணி பெண்கள் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும். மேலும், மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

பீட்ருட்:

கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், ரத்த சோகையை சரிப்படுத்தும்.

தக்காளி:

தக்காளி பழத்தின் அற்புத நன்மைகள்;

வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்து தக்காளி பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது . இதை தினம்தோறும் நாம் சாப்பிடுவதால் எலும்புகள் உறுதியாகப்படுகின்றன. மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் இதன் மூலம் நாம் தவிர்க்கலாம்.

படிகாரம்:

படிகாரம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். 20 கிராம் படிகாரத்தை 2 லிட்டார் தண்ணீரில் கலந்து முகம் கை கால்களை கழுவி விட்டு வெளியில் சென்றால் எந்த நோய் தொற்றும் அண்டாதாம்.

செம்பருத்தி:

இதயத்தை பலப்படுத்தும் செம்பருத்தி பூ ஜூஸ் !

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து 15 செம்பருத்தி பூக்களைப் போட்டு மூடி வைக்க வேண்டும், அடுப்பை அணைத்து விடவும். செம்பருத்தி கலந்த நீர் ஆறிய பின் அதை வடிக்கட்டிய பின் எலுமிச்சப் பழச்சாறு கலந்து தேவையான அளவு சர்க்கரை கலந்து பருகினால் இதயம் வலுப்பெறும்.

வெள்ளரிக்காய்:

கோடைக்காலத்தில் பலரையும் பாதிக்கும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாகும். நார்சத்து நிறைந்தது வெள்ளரி. இதில் அதிக நீர்ச்சத்தும் நுண்சத்துகளும் உள்ளன. கோடைக்கேற்ற நொறுக்குத் தீனி என்று கூட இதை சொல்லலாம்.

அன்னாச்சி பழம்:

அன்னாச்சிப் பழத்தைச் சாப்பிடுவதால் ரத்தம் சுத்தமாகும், இரத்தம் ஊறும் உடலில் உள்ள பித்தம் போகும் தாகம் அடங்கும் உடல் பளபளப்பாகும்.

சீத்தாப்பழம்:

சீத்தாப்பழத்தில் வைட்டமின் A ஏராளமாக உள்ளது. இது தலைமுடியையும், சருமத்தையும் பாதுக்காப்பாக வைக்க உதவுகிறது. சீத்தாப்பழம் ரத்தசோகை குறைப்பாட்டை தடுக்க உதவும். முக்கியமாக பெண்களுக்கு மிகவும் ஏற்ற மருத்துவ குணம் நிறைந்த கனியாக இருக்கிறது. ரத்த அழுத்தத்தால் அவதிப்
பாடுப்பவருக்கும் சீத்தாப்பழம் சிறந்த மருந்தாக இருக்கிறது.

Share This Article
Exit mobile version