பச்சைப்பயிரை உண்பதால் ஏற்படும் நன்மைகள்

Pradeepa 5 Views
1 Min Read

நம் அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வது மிக அவசியம். அதில் ஊட்டச்சத்து நிறைத்த சிறு தனியா வகைகளை நம் உணவில் பயன்படுத்துவது முக்கியம். அந்த வகையில் பச்சைப்பயிறு என்னும் பருப்பு வகையை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது.

ஊட்டச்சத்து நிறைத்த பொருட்களை உணவில் எடுத்துகொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. ஊட்டசத்து என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது புரதம் தான். அதாவது பச்சைப்பயிரில் புரோட்டீன் அதிக அளவில் உள்ளது.

இந்த கொரோனா நோய் பரவல் காலத்தில் அதிக அளவு சக்தி நிறைத்த உணவுகளை பயன்படுத்துவது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கவல்லது.

உணவில் மட்டுமல்லாமல் நம் முகத்திற்கும் இந்த தானியத்தை பயன்படுத்தினால் முகம் பொலிவு பெறும். பச்சைப்பயிரில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளதால் இதை உண்பவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தரும்.

பச்சைப்பயிரில் குறைத்த அளவு கொழுப்பு உள்ளதால், உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் இந்த பயிரை தினமும் பயன்படுத்தலாம்.

பச்சைப்பயிரை முளைகட்டி அல்லது வேகவைத்து உண்டால் நம் உடலுக்கு மிகவும் நல்லது என்பதை பற்றி உணவியல் நிபுணர் தெளிவான விளக்கத்தை தந்துள்ளார்.

அதில் முளைகட்டிய உணவை அதிகம் எடுத்துக்கொண்டால் வயிற்றில் குடல் பிரச்சனை ஏற்படும். எனவே பயிரை வேகவைத்து எடுத்துகொல்வது மிகவும் நல்லது .சிறியவர்கள் முதல் பெறியவர்கள் வரை உணவில் எடுத்துக்கொண்டால் ஆரோகியத்துடன் வாழ்நாள் முழுவதும் இருக்கலாம்.

Share This Article
Exit mobile version