முட்டையின் வெள்ளை கரு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்….!

Selvasanshi 53 Views
2 Min Read

பொதுவாக முட்டையில் ஏராளமான புரதச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. அதிலும் பிராய்லர் கோழி முட்டையை விட நாட்டு கோழி முட்டையில் தான் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. முட்டையின் வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கரு இரண்டுமே ஆரோக்கியமானது தான். இதில் மஞ்சள் கருவை விட வெள்ளைக்கருவை தான் பலரும் விரும்பி சாப்பிடுகிறார்கள் ஏன்னென்றால் இதில் கொலஸ்ட்ரால் கிடையாது.

குறிப்பாக வெள்ளைக் கருவில் வைட்டமின் பி சத்து அதிக அளவு உள்ளது. இந்த வைட்டமின் பி சத்து நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இப்போது பார்க்கலாம் .

எலும்புகள்

முட்டையின் வெள்ளைக்கருவில் கால்சியம் அதிகளவு உள்ளதால், இவை நமது எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது. கால்சியம் பற்றாக்குறையினால் எலும்பு பலவீனமாக இருப்பவர்கள் இந்த முட்டையின் வெள்ளைக்கருவை அதிக அளவு உட்கொள்ளலாம். மேலும் எலும்புகளில் ஏற்படக்கூடிய ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகிய பிரச்சனைகளை போக்க இந்த வெள்ளை கரு மிகவும் உதவுகிறது.

இதயம்

முட்டையின் வெள்ளை கருவை உண்பதன் மூலமாக இதயத்தில் ஏற்படும் இரத்த உறைவு நீக்கப்படுகிறது. மேலும் முட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுக்கள் இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் முக்கியமாக இதயம் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை அதிகளவு உட்கொள்ளலாம். ஏன்னென்றால் முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள அதிக அளவு பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளும்.

சோர்வு

முட்டையின் வெள்ளை கருவில் இரும்பு சத்தும் அதிக அளவு காணப்படுகிறது. நம் உடலில் இரும்புச்சத்து குறைவால் ஏற்படக்கூடிய சோர்வை நீக்குவதற்கும், தலைசுற்றலை மாற்றுவதற்கும் இந்த முட்டை பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் மாங்கனீசும் உடல் சோர்வை நீக்குகிறது.

தசைகள்

முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரதமானது நம் தசைகளை வலுவாக்க செய்கிறது. மேலும் தளர்ந்த தசைகளையும் கெட்டியாக்க இது உதவுகிறது. எனவே, நம் அன்றாட உணவில் முட்டையின் வெள்ளைக்கருவை அதிக அளவு சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் ஒவ்வாமை, சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் வெள்ளை கரு உண்பதை தவிர்க்க வேண்டும்.

Share This Article
Exit mobile version