இளநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

Pradeepa 13 Views
3 Min Read

கோடை காலம் மட்டும் இன்றி அனைத்து காலத்துக்கும் ஏற்ற பானமாக இளநீர் இருந்துவருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி குடித்து வருகின்றனர். இளநீரானது இயற்கையில் கிடைக்கப்பெறும் ஆரோகிய பானைகளில் ஒன்று. தென்னை தோப்பிற்கே சென்று மரத்தின் நிழலில் இளநீரை குடிப்பது என்பது மட்டற்ற மகிழ்ச்சியை தரும்.

இளநீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலுக்கு நாள் முழுவதும் புத்துணர்ச்சியை அளிக்கும். இந்த பானத்தை பருகினால் வெயிலின் தாக்கத்திலிருந்து மீளலாம். இந்த நீரானது உடலுக்கு பல நன்மையை தரவல்லது. இளநீரில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி கிழே காண்போம்.

வயிற்றுப்போக்கு:

வயிற்றுக் போக்கு அதிக அளவில் நிகழும் போது உடலில் நீரின் அளவில் குறையும். அதிகப்படியான நீர் வெளியேற்றம் காரணமாக உடல் சோர்வுடன் காணப்படும். இந்த நேரத்தில் இளநீர் பருகுவது உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் இளநீரில் உள்ள எலெக்ட்ரோலைட் பொட்டாசியம், உடம்பில் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் எலெக்ட்ரோலைட் குறைப்பாட்டை நீக்க உதவுகிறது.

எடை குறைவு

உடல் பருமன் அதிகமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் காலையில் இளநீரை குடித்தால் அவர்கள் உடம்பில் உள்ள கொழுப்புகள் கரையும். இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால் அதனை குடித்தால் வயிறு நிறைந்து போல் தோன்றும். எனவே அதிகமான முறையில் உடலுக்கு தேவையில்லாத உணவுகளை சாப்பிட முடியாமல் போய்விடும் இதன் விளைவாக உடலின் பருமன் குறைய உதவுகிறது.

நீரிழிவு

சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஆரோகியமான ஊட்டச்சத்துக்கள் இளநீரில் இருப்பதனாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும். சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது அவர்களுக்கு மிகவும் நல்லது.

வைரஸ் நோய்கள்

கொரோனா போன்ற வைரஸ் கிருமிகள் நம் உடலை தாக்குவதால் சளிக் காய்ச்சல் மற்றும் ஹேர்ப்ஸ் ஏற்படுகிறது. ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியானது இளநீரில் அதிகம் காணப்படுவதால் எந்த ஒரு வைரஸும் நம்உடலை தாக்காது. வைரஸை எதிர்த்து போராட இது ஒரு நல்ல மருந்தாக அமைகிறது.

உடல் வறட்சி

உடலில் வறட்சி காணப்படும் போது இளநீரை பருகிவந்தால் நரம்பின் வழியாக உடலுக்கு நீர் சக்தியை தரும். மிகவும் தொலைவில் இருந்து நடந்து வரும்போது நாக்கு வறண்டு காணப்படும் அப்போது இந்த நீரை பருகினால் உடல் சக்தி பெரும். எந்த ஒரு மருத்துவ வசதியும் கிடைக்காத இடத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு, இப்பிரச்சனை ஏற்பட்டால் இளநீரை கொடுத்து குணப்படுத்தலாம்.

இரத்த அழுத்தம்

நோயாளிகளுக்கும் அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இளநீரை கொடுத்தால் அதில் உள்ள வளமான அளவு பொட்டாசியம் உடலின் இரத்த அழுத்தம் மற்றும் வாதத்திற்கும் நல்ல மருந்தாக அமைகிறது.

சிறுநீரக கற்கள்

சிறுநீரகத்தில் பிரச்னை என்பவர்களும், சிறுநீரகத்தில் கல் என்பவர்களும் இளநீரை குடித்து வந்தால் அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள்நிறைத்து இருப்பதால், சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதை தடுக்கும்.

சரும பிரச்சனைகள்

முகத்தில் பருக்கள், கரும் புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்ட சருமங்களில் இளநீரை இரவில் படுக்கும் போது தடவி, காலையில் கழுவி வந்தால் சருமம் பொலிவு பெரும். இதை தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால் சரும பிரச்சனைகள் தீரும். முகத்தில் தோன்றும் முதுமையை போகும்.

புற்றுநோய்

இளநீரில் உள்ள செலினியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராகவும் நிற்கின்றன. ஆனால் மற்ற பானங்களை அருந்துவதை விட இளநீரை எடுத்துக்கொள்வது உடம்புக்கு மிகவும் நல்லது என்பது உறுதியாக கூறமுடியும்.

Share This Article
Exit mobile version