தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!

Selvasanshi 1 View
1 Min Read

ஹைலைட்ஸ்:

  • நடைப்பயிற்சி செய்வதால் நுரையீரலில் ஆக்சிஜன் கொள்ளளவு பல மடங்கு அதிகரிக்கும்.
  •  நாம் உடலின்  ரத்த ஓட்டம் சீராகும்.
  • நடைப்பயிற்சி எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.

இன்றைய வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால்  நாம் அனைவருக்கும்  தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவது மிகவும் நல்லது.

ஒருவர் நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது, இதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்கும். இதன் விளைவாக இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இவர்களுடைய  இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.  உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும்.

நாம் தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொண்டால், உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவித்து இருக்கின்றன. இந்தவகையில் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்  என்பதை விரிவாக பார்ப்போம்.

தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவதால் நாம் உடலின்  ரத்த ஓட்டம் சீராகும். நடைப்பயிற்சி கலோரிகள் எரிக்க உதவுகிறது. நாம் உடலின் நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும். மேலும் முதுகு நரம்புகளும் உறுதியாகும்.

நடைப்பயிற்சி செய்வதால் நுரையீரலில் ஆக்சிஜன் கொள்ளளவு பல மடங்கு அதிகரிக்கும். நமக்கு ஆழ்ந்த தூக்கமும் வரும். நடப்பவர்களின் உடலில் இருந்து கெட்ட நீர் வியர்வையாக வெளியேறி, இவருக்கு கூடுதல் பலனாக வைட்டமின் டி கிடைக்கும். செரிமானம் குறைவாக உள்ளவர்கள் நடைப்பயிற்சி  மேற்கொண்டால் செரிமானமும் சீராகும். இதனால் தன்னம்பிக்கையும்  அதிகரிக்கும்.

நடைப்பயிற்சி எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. மேலும் உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு சத்தின் அளவையும்  குறைக்கிறது.

மேலும் கண் பார்வையைத் தெளிவு படுத்தும். இதயத்தை வலிமையாக்கும். இதனால் மனம்  மகிழ்ச்சியடைந்து எப்போதும் இளமையாக இருக்கலாம்.

எனவே தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்து நம் உடலை பாதுகாப்போம்.

Share This Article
Exit mobile version