பாகற்காயின் நன்மைகள்

Pradeepa 25 Views
2 Min Read

பாகற்காய்-னா கசப்பு அதுனால் அதை பார்த்தால் எல்லோருக்கும் வெறுப்பு. நாவிற்கு கசப்பு மட்டுமே தவிர நமது ஆரோக்கியம் மிகவும் இனிப்பானது. வாரத்தில் ஒரு முறை உணவில் சேர்த்து வர அறுசுவைகளில் ஒன்றான கசப்பு சுவை நமது உடலுக்கு அதிக மருத்துவ குணங்களை அள்ளித்தரும்.

பாகற்காயின் மருத்துவக்குணங்கள்:

  • வைட்டமின் A ,வைட்டமீன் B,வைட்டமின் C, பீட்டகரோடின் லுடின் போன்ற மருத்துவக்குணங்களைக் கொண்டது.
    இரும்புசத்து ,துத்தநாகம் ,பொட்டாசியம் ,மாங்கனீசு ,மெக்னீசியம் தாதுக்கள் எராளமான சத்துக்கள் கொண்டது.

பாகற்காயினால் குணமாகும் நோய்கள் :

  • பாகற்காயில் உள்ள வைட்டமின் A கண் மற்றும் சருமத்திற்கு நல்லது.
  • கணையம் செல்களை புதுப்பிக்க பாகற்காயில் உள்ள கசப்பு மிகவும் உதவுகிறது .
  • பாகற்காய் ஜூஸ் தினமும் குடித்தால் கல்லீரலில் உள்ள கழிவுகள் நீங்குக்கும்.
  • பாகற்காயில் இருக்கும் கசப்பு அமிலம் வெள்ளை அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.
  • சர்க்கரை வியாதிக்கு (பகுதி -II )-க்கு பாகற்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
  • இரத்தத்தை சுத்திகரிக்க பாகற்காய் உதவும் .
  • வயிற்றில் உள்ள பூச்சிக்களை தவிர்க்க பாகற்காய் உதவுகிறது.

பாகற்காய் சுக்கா செய்வது எப்படி ?

தேவையான பொருள்கள் :

  1. பாகற்காய் – 250கி
  2. எண்ணைய் – 4 டேபிள் ஸ்பூன்
  3. வெங்காயம் -1
  4. பூண்டு – 4 பல்
  5. கருவப்பிள்ளை – சிறிதளவு
  6. மஞ்சள்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  7. காஸ்மீர் மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  8. சாம்பார் மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  9. சாம்பார் பொடி -1 டேபிள் ஸ்பூன்
  10. வெல்லம் – சிறிதளவு
  11. உப்பு – தேவையான அளவு

செய்முறை :

பாகற்காயின் மேலுள்ள தோலை நீக்கி உப்பு தண்ணீரில் போட்டு ஊறவைக்க வேண்டும். பிறகு, பாகற்காயை நன்கு தண்ணீரில் கழுவ வேண்டும். கடாயில் சிறிதளவு எண்ணைய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்,பிறகு இடித்த பூண்டை போட்டு வதக்க வேண்டும், பிறகு பாகற்காய் போட்டு 5 நிமிடங்கள் மூடி போட்டு வேகவைக்க வேண்டும். அதன் பிறகு உப்பு, மஞ்சள்த்தூள்,காஸ்மீர் மிளகாய்த்தூள்,சாம்பார் மிளகாய்த்தூள்,சாம்பார் பொடி தேவையான மசாலாக்களை போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும். கடைசியாக வெல்லம் போட்டு தண்ணீர் ஊற்றாமல் நன்றாக வறுக்க வேண்டும். 3 நிமிடங்கள் கழிந்து கொத்தமல்லி பூட்டு பரிமாரறுங்கள்.

Share This Article
Exit mobile version