பாதாமின் சில நன்மைகள்

Shenba 7 Views
1 Min Read

உணவே “மருந்து” என்ற வாக்கியத்திற்கு இணங்க நாம் உண்ணும் உணவே நமக்கு சிறந்த மருந்தாகும்.இவற்றில் சில உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடிய உணவுகள் மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுகள் உள்ளன.இவற்றில் உடல்நலத்திற்கு நன்மை தரக்கூடிய உணவுகளில் இந்த பாதமும் அடங்கும்.இந்த பாதாமைநன்மையைப் பற்றி இந்த பதிவில் காணலாம்…

பாதாமின் நன்மைகள்:

தினமும் வெறும் நான்கு பாதாம் சாப்பிட்டு வந்தால் நடக்கும் அதிசயத்தை காணலாம்.பாதாமில் வைட்டமின் இ,கால்சியம்,பாஸ்பரஸ்,மெக்னீசியம் பல சத்துக்கள் உள்ளன.

பாதாமில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நல்ல அளவில் உள்ளது. அதிலும் தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைக்க உதவும்.

நார்ச்சத்து அதிகம் இருக்கும் பாதாமை சாப்பிட்டால், அது குடலியக்கத்தை சீராக வைத்து, குடல் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் ஈ, பைட்டோ கெமிக்கல் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் இருப்பதால், மார்பக புற்றுநோயை உண்டாக்கும், செல்கள் வளர்வதை தடுக்கும்.

பாதாம் உண்ணும் முறை:

பாதாம் மட்டும் தனியாகவோ அல்லது பேரீட்சை மற்றும் கிஸ்மிஸ் பழத்துடனோ சேர்த்துச் சாப்பிடலாம். காலையில் பத்து பாதாம் மற்றும் மாலையில் பத்து என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் அத்தனையும் சாப்பிடுவது என்பது சாத்தியப் படாது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாதாம் சாப்பிடக்கூடாது.

 பாதாம் எண்ணெய்:

உள்ளங்கையில் சிறிது பாதாம் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.

  • பின் அந்த எண்ணெயை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
  •  இரவு முழுவதும் எண்ணெயை நன்கு ஊற வையுங்கள்.
  •  மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.
  •  இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Share This Article
Exit mobile version