பீட்ரூட் ஜூஸ் நன்மைகள்

sowmiya p 6 Views
3 Min Read

பீட்ரூட் ஜூஸ் நன்மைகள்:

  • உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
  • இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு தசைகளை வலிமை பெறச் செய்யும்.
  • 2015 ஆம் ஆண்டின் ஆய்வின் படி பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் இதயத்திற்கு அதிக அளவில் ஆற்றலை கொடுக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டது.
  • பீட்ரூட் ஜூஸில் எந்த விதமான கொழுப்புகளும் இல்லை குறைந்த கலோரிகளே உள்ளது எனவே காலை ஒரு கப் ஜூஸ் குடித்து வந்தால் உடலில் தேங்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது.
  • புற்றுநோயை அளிக்கும் சக்தி இதற்கு உண்டு மற்றும் உடலில் உள்ள தேவையற்ற செல்களை கண்டறிந்து அதையும் அளிக்கும் வல்லமை உடையது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • கல்லீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது.
  • பீட்ரூட் ஜூஸ் குடித்தவுடன் மலம் இளஞ்சிவப்பு நிறத்தில் போனால் அச்சம் கொள்ள தேவை இல்லை.
  • ஆண்மை பிரச்சனைகள் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் ஆண்மையே அதிகரிக்கும்.
  • உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இது உதவுகிறது.
  • அல்சர் உள்ளவர்கள் வாரத்திற்கு மூன்று முறை குடித்து வந்தால் அல்சர் விரைவில் குணமாகும்.
  • செரிமான பிரச்சனை இருப்பவர்கள் தினமும் பீட்ரூட் ஜூஸ் அருந்தி வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கும்.
  • மூல நோய் உள்ளவர்கள் பீட்ரூட்டை கசாயம் வைத்து குடித்து வந்தால் விரைவில் மூல நோய் குணமாகும்.
  • பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் இரத்தத்தை சுத்திகரித்து இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.
  • தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் முதுமையை தள்ளி வைத்து இளமையாக இருக்கலாம்.
  • சருமம் மற்றும் தோளில் அரிப்பு உள்ளவர்கள் பீட்ரூட் சாறுடன் சிறிதளவு படிகார பொடி சேர்த்து கலந்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவி வந்தால் அரிப்பு எளிதில் குணமாகும்.
  • தீக்காயம் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் சிறிதளவு தடவி வந்தால் தீ காயம் குணமாகும் மற்றும் கொப்புளம் ஆகாமல் தடுக்கலாம்.
  • பித்தம் உள்ளவர்கள் அடிக்கடி வாந்தி எடுப்பவர்கள் இதை அருந்தி வந்தால் எளிதில் குணமாகும்.

பீட்ரூட் ஜூஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

  • கால்சியம்
  • இரும்புச்சத்து
  • மக்னீசியம்
  • மாங்கனீஸ்
  • பாஸ்பரஸ்
  • சோடியம்
  • காப்பர்
  • செலினியம்
  • விட்டமின் சி

பீட்ரூட் ஜூஸ் தீமைகள்:-

  • இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்து விடும்.
    சிறுநீரில் கற்கள் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்க்கவும் இது இயற்கையாகவே கற்களை ஏற்படுத்தும் மேலும் கற்கள் ஏற்பட்டு வலி வர வாய்ப்புகள் உள்ளதால் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்க்கவும்.
  • பீட்ரூட்டில் ஆக்ஸைட்கள் அதிகம் இருப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாக வாய்ப்புகள் அதிகம்.

பீட்ரூட் ஜூஸ் செய்யும் முறை:-

  • பீட்ரூட்டை நன்கு அரைத்து குடிக்கலாம். இதை குடிக்கும் பொழுது சுவை பிடிக்காதவர்கள் இதனுடன் ஆப்பிள் ஆரஞ்சு இஞ்சு இதில் ஏதாவது ஒன்றை சேர்த்து அரைத்து குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.

பீட்ரூட் அழகு குறிப்புகள்:-

  • முகத்தில் அதிகப்படியான அழுக்குகள் படிவதால் சருமத்தில் பருக்கள் மற்றும் முக சுருக்கம் ஏற்படுகிறது. இதை சரி செய்ய பீட்ரூட் பெரிதும் உதவுகிறது.
  • இதை செய்வதற்கு ஒரு தேக்கரண்டி பீட்ரூட் ஜுஸ் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு கலந்து வைத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் முகம் பளிச்சென்று வெண்மையாக மாறிவிடும்.

கர்ப்பிணி பெண்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாமா:-

  • பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. கர்ப்பிணிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெலும்பு நன்றாக வளர்ச்சி அடையும், குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

 

Share This Article
Exit mobile version