ஆலமரத்தின் அற்புத பயன்கள்

sowmiya p 8 Views
2 Min Read

மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அரசமரத்தை போன்றே ஆலமரத்திற்கும் அதிக மருத்துவ குணங்கள் உண்டு.

  • ஆலமரத்தில் உள்ள பழம், இலை, விழுது என அனைத்தும் மனிதனுக்கு நலம் தருகிறது. ஆலம்பழத்தில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள செல்களை புதுப்பித்து சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.
  • ஆலமர விழுதுகளில் உள்ள இலைகளை அரைத்து வெண்ணெய் சேர்த்துச் சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
  • ஆலமர விழுதை அரைத்து தினமும் ஒன்று முதல் மூன்று கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் விந்து நீர்த்துப்போகாமல் தடுக்கப்படும்.
  • ஆலமர விழுதைப் பொடி செய்து தினமும் காலை மாலை இருவேளையும் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
  • ஆலமர விழுதை கஷாயம் வைத்துக் குடித்தால் பித்தக் காய்ச்சல் குணமாகும்.
  • ஆலமர மொட்டுகளைப் பொடி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.
  • ஆலமர இலைகளைப் பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
  • ஆலமர இலைகளை எரித்து, ஆளி விதை எண்ணெய்யில் குழைத்து சொட்டை விழுந்த இடத்தில் தடவினால் அங்கு விரைவில் முடி முளைக்கும்.
  • ஆல மரத்தின் பழுத்த இலைகளை எரித்து, அந்தச் சாம்பலைப் புண்கள் மீது தடவ அவை விரைவில் ஆறும்.
  • ஆலமர இலைகளை லேசாகச் சூடுபடுத்தி காயங்கள் மீது வைத்துக்கொண்டால் அவை விரைவில் ஆறும்.
  • ஆலமரத்துப் பால், எருக்கம் பால் இரண்டையும் ஒன்றாகக் கலந்து புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறும்.
  • ஆலமரத்துப் பாலை உதட்டுப் புண்கள் மீது தடவிவந்தால் அவை விரைவில் ஆறும்.

ஆலமரத்திற்கு கன்று தனியாக நட்டு வளர்க்க வேண்டிய அவசியமில்லை. பறவைகள் உண்ணும் பழத்தின் விதைகள் எச்சத்தின் மூலமாக வெளிப்பட்டு தானாக ஆலமரம் முளைக்கும். அப்படி முளைக்கும் இந்த மரக்கன்றுகள் சற்று உயரமாக வளரும் வரை அவற்றுக்கு ஈரப்பதம் தேவை.அதன் பின்னர் இது வறட்சியை தாக்கி வளரும் தன்மை கொண்டது. இன்று பல்வேறு இடங்களில் ஆலமரங்கள் பாதுகாக்கப்படுகிறது. இதில் சற்று முக்கியமானது ‘அடையாறு’ ஆலமரம். கடந்த 450 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் பழங்காலம் தொட்டு பாரம்பர்யமாக கருதி வரும் ஆலமரங்கள் நாம் காக்க வேண்டிய பொக்கிஷங்கள்தான். காட்டை அழிக்கும் சாமியார்கள் இங்கு மரம் நட்டு வளர்ப்பார்கள் என நினைப்பதை தவிர்த்து, நன்மை தரும் அனைத்து மரங்களையும் பாதுகாப்பதும் நமது கடமைதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பயன்:

  • ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
  • நல்ல நிழல் தரும்.
  • இதன் இலைகளைத் தைத்து உண்கல இலையாகப் பயன்படுத்துவர்
  • ஆலம் பழத்தைப் பறவைகள் விரும்பி உண்ணும்
  • பசு கன்று ஈன்றபின் போடும் மாசியை வைக்கோல் தாளில் கட்டி ஆலமரத்தில் தொங்கவிடுவர்
  • இது நல்ல நிழல் தருகிறது

இந்திய தேசிய மரம்:

  • இந்திய தேசிய சின்னங்களில் ஆலமரம் தேசிய சின்னமாக உள்ளது.

சொல்லின் வேர்:

  • அல் மற்றும் அலை என்பதற்கு அலைதல், விரித்தல் என்று பொருள். ஆலமரம் அலைந்து விரிந்து வளரும் மரம் என்பதால் “ஆல் “என்று பொருள். அதே போல ஆலை என்பதற்கு அலைந்த விரிந்த இடம் என்றும் பொருளுண்டு.

பழமையான ஆலமரம்:

  • சென்னை அடையாற்றில் 450 வயதை கடந்த பழமையான ஆலமரம் பாதுகாக்கபட்டு வருகின்றது.
Share This Article
Exit mobile version