புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க மாஸ்டர்கார்டு நிறுவனத்திற்கு தடை – RBI

Pradeepa 2 Views
0 Min Read

இந்தியாவில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனத்திற்கு வரும் 22ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

 

மாஸ்டர் கார்டு ஆசியா பசுபிக் நிறுவனம் தரவு சேமிப்பு குறித்த விதிகளை பின்பற்றாத காரணத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பண பரிவர்த்தனை குறித்த தரவுகளை சேமிப்பது தொடர்பான விதிமுறைகளை பின்பற்றுவதற்கு போதுமான கால அவகாசமும் வாய்ப்புகளும் கொடுத்த போதும் மாஸ்டர் கார்டு நிறுவனம் அதன் படி நடக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த தடையால் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று RBI தெரிவித்துள்ளது.

Share This Article
Exit mobile version