B.E, B.TECH உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்களுக்கு ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. பொறியியல் படிப்பில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்க்கான பணிகளை தொழிநுட்ப கல்வி கழகம் துவங்கியுள்ளது.
B.E, B.TECH பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு இன்று முதல் https://www.tneaonline.org/ அல்லது http://www.tndte.gov.in/ என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பிக்க உதவி செய்வதற்க்காக பொறியியல் கல்லூரிகளிலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி random எண்ணையும், செப்டம்பர் 4 ஆம் தேதி தரவரிசை பட்டியலையும் வெளியிடுவதற்கு உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. சிறப்பு பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 7 ஆம் தேதியும், பொது கலந்தாய்வு செப்டம்பர் 14 ஆம் தேதியும் தொடங்குகிறது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் கலந்தாய்வு அனைத்தும் ஆன்லைன் வழியே நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவ மாணவியர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக இணையதளம் வாயிலாக இன்று முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரிகளில் உள்ள உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையம் வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் மாவட்ட சேர்க்கை சேவை மையங்கள் நேரடியாகவும் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பெறலாம். அரசு இ- சேவை மையத்தின் மூலமும் மாணவர்கள் விண்ணப்பிக்காலம். கூடுதல் விவரங்களுக்கு கல்லூரி இயக்கத்தை 044-28260098, 28271911 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெறலாம்.