சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நேற்று(மே 11ஆம் தேதி) நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத்தில் புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள், எதிர்கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், சட்டமன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பதவி ஏற்று கொண்டனர்.
சட்டசபை சபாநாயகருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பின் படி சட்டப்பேரவை தலைவர் பதவிக்கு அப்பாவும், துணை தலைவர் பதவிக்கு கு.பிச்சாண்டி வேட்பு மனு தாக்கல் செய்தனர். தேர்தலில் இவர்களை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் போட்டிகள் எதுவும் இன்றி சட்டபேரவை தலைவராக அப்பாவு, சட்டப்பேரவையின் துணை தலைவராக கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டார்.
இன்று சபாநாயகர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி இருவரும் சட்டப்பேரவை தலைவர்களை இருக்கையில் அமரவைப்பார்கள்.