Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

கடந்த டிசம்பர் மாதம் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியபோது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர்.

இதனால் ரஜினிகாந்த் தன்னை பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனாலும் சில நாட்கள் ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக்கொண்டார். இவருக்கு ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.

உடல்நிலையை கருதி கொண்டு தான் அரசியலுக்கு வரவில்லை என்றும் அறிவித்தார். வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவர் போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டுக்கான பூமி பூஜையில் கலந்துக்கொண்டார். இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு நேரில் சென்றும் பார்வையிட்டார். இந்தநிலையில் மீண்டும் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

ஐதராபாத் செல்வது ரஜினிகாந்துக்கு சிரமமாக உள்ளது என்று படக்குழுவினர் சென்னையிலேயே அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகிறார்கள். சென்னையில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 பேர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோரும் உள்ளனர். இந்த திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். அண்ணாத்த திரைப்படம் தீபாவளியில் திரைக்கு வருகிறது.

Share: