அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்சி படிக்கலாம்

Pradeepa 4 Views
3 Min Read

அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்புபவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு. இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறுகிறது. இந்த அறிவிப்பு 2021-ம் காலாண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் நடத்தப்படுகிறது. இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்படிப்பை படித்துவிட்டு பணியில் இருப்பவர்கள் தங்களது கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்ஸி-சிஎஸ் ஆகிய படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கற்றுத்தரப்படும் படிப்புகள்

  • எம்.பி.ஏ-வில் ஜெனரல் மேனேஜ்மென்ட், டெக்னாலஜி மேனேஜ்மென்ட்,
  • மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்,
  • பைனான்ஷியல் சர்வீஸஸ் மேனேஜ்மென்ட், ஹெல்த் சர்வீஸஸ் மேனேஜ்மென்ட்,
  • ஹாஸ்பிட்டாலிட்டி அண்ட் டூரிஸம் மேனேஜ்மென்ட், ஆபரேஷன்ஸ் மேனேஜ்மென்ட்
  • மேலுள்ள படிப்புகள் மட்டுமன்றி எம்.சி.ஏ, எம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளும் கற்றுத்தரப்படுகிறது.

எம்.பி.ஏ(MBA) படிப்புகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ(MCA) படிப்பில் சேர விரும்புவோர் பி.சி.ஏ(BCA) அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்களது பட்டப்படிப்பில் குறைந்த பட்சம் 50% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர்கள் 45% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

தொலைநிலைக் கல்வி முறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் ரெகுலரிலோ, தொலைதூரக் கல்வியிலோ முதுநிலை படிப்புகளில் சேர்ந்திருப்பவர்கள் இப்படிப்பில் சேர தகுதியற்றவர்கள்.

எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் DEET எனப்படும் Distance Education Entrance Test-ஐ எழுத வேண்டும். எம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு எழுத தேவையில்லை. அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய டான்செட் 2020ல் நடைபெற்ற நுழைவுத் தேர்வை எழுதியவர்கள் DEET நுழைவுத் தேர்வை எழுதத் தேவை இல்லை.

நுழைவுத் தேர்வு

  • குவான்டிடேட்டிவ் எபிலிட்டி (Quantitative Ability),
  • அனலிட்டிக்கல் ரீஸனிங் (Analytical Reasoning),
  • லாஜிக்கல் ரீஸனிங் (Logical reasoning),
  • கம்ப்யூட்டர் அவேர்னஸ் (Computer awareness)
  • வெர்பல் ஆக்டிவிட்டி, பேஸிக் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் இருந்து சில கேள்விகள் கேட்கப்படும்.

இந்த தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். கொள்குறி வினா விடை முறையில் நடத்தப்படும் நுழைவு தேர்வில் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையைத் மட்டுமே எழுத வேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 1 மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது

எம்.பி.ஏ படிப்பிற்கான DEET நுழைவுத்தேர்வு 2021 ஏப்ரல் 18 ஆம் தேதி சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களில், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெறும்.

இதே நாளில் எம்.சி.ஏ படிப்பிற்கான DEET நுழைவுத்தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும். இந்த நுழைவு தேர்வு காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும்.

டான்செட் நுழைவுத்தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையிலும், DEET நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கவுன்சலிங் முறையில், தகுதி உடையவர்கள் மேற்குறிப்பிட்ட படிப்புகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

படிப்புக் கட்டணம்

இப்படிப்புகளுக்கான கட்டணம் முதல் செமஸ்டருக்கு மட்டும் ரூ. 18,650. மற்ற செமஸ்டர்களுக்கு 12,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

விண்ணப்பித்தல்

ஆன்லைனில் மூலம் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்தபின் பிரின்ட் அவுட் எடுத்து, அதனுடன் வேண்டிய சான்றிதழ்களின் நகல்களோடு, விண்ணப்பக் கட்டணம் ரூ.650-க்கான டிமாண்ட் டிராஃப்டை இணைத்து கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

#39;THE DIRECTOR, CENTRE FOR DISTANCE EDUCATION, ANNA UNIVERSITY, CHENNAI' என்ற பெயரில் டிமாண்ட் டிராஃப்ட் எடுக்க வேண்டும்.

முக்கிய விவரங்கள்

எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2021

எம்.எஸ்ஸி. சிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.04.2021

எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: 24.4.2021

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

THE DIRECTOR,

CENTRE FOR DISTANCE EDUCATION,

ANNA UNIVERSITY,

CHENNAI – 600 025.

இப்படிபிற்க்கானஅனைத்து தகவல்களும் அண்ணா பல்கலைக்கழக தொலைநிலை கல்விக்கான இணையதளத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

Share This Article
Exit mobile version