அரியர் மற்றும் முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது! – அண்ணா பல்கலைக்கழகம்

Selvasanshi 3 Views
1 Min Read

ஹைலைட்ஸ்:

  • பொறியியல் மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணைய வழியில் நடத்தப்பட்டது.
  • அரியர் தேர்வு எழுதிய பொறியியல் மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
  • முதலாமாண்டு பொறியியல் மாணவர்களின் முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்திருக்க வேண்டிய கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் தள்ளி வைத்தது.

இந்த தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணைய வழியில் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான பொறியியல் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழியில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக கல்லூரி மாணவர்களால் பருவ தேர்வு எழுத முடியாமல் கூட போனது.

இதற்கிடையே கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி பிஇ, பிடெக் மற்றும் எம்இ, எம்டெக் படிப்புகளில் 2-ஆம் ஆண்டு, 3-ஆம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டது.

இதில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. அதனால் மீண்டும் இந்தத் தேர்வுகள் நடத்தப்படுவதாக உயர் கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.

இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இருந்து அரியர் தேர்வு எழுதிய பொறியியல் மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதேபோல முதலாமாண்டு பொறியியல் மாணவர்களின் முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை https://aucoe.annauniv.edu/regular_result_nd2020/index.php என்ற அண்ணா பல்கலைக்கழக இணையத்தளத்தில் பார்க்கலாம்.

Share This Article
Exit mobile version