அமமுகவின் தேர்தல் அறிக்கையை பொதுச்செயலர் தினகரன் வெளியிட்டுள்ளார். 63 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில், விவசாயிகள், நெசவாளர்கள் நலன்களுக்காக 100 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அம்மா பொருளாதார புரட்சித் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இனிமேல் மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படாது என உடனடியாக கொள்கை முடிவெடுக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள மதுபான கடைகளை படிப்படியாக குறிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அமமுக கட்சி ஆட்சிக்கு வந்தால்
- வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும்,
- நெல்லுக்கு ஆதாரவிலை 3000 ரூபாய் வரையும்,
- கரும்பு ஒரு டன்னுக்கு 4000 ரூபாயாகவும் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்படும்,
- உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் மானியத்துடன் விவசாயிகளின் வீடு தேடி வழங்கப்படும்,
- பள்ளி மாணவர்களைப் போலவே, அரசு கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்,
- மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்துகளில் 50 சதவிகிதம் கட்டணச் சலுகை வழங்கப்படும்,
- கிராமப்புறத் தொழில்வளர்ச்க்கு, குறைந்தது 5 பொறியியல் பட்டதாரிகள் இணைந்த ஒரு குழுவுக்கு 25 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்
என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன