முதல் கவிதை
என்னை சுவாசிக்க வைத்த அவளுக்காக நான் வாசித்த முதல் கவிதை அம்மா
உன் இமைக்குள்
அம்மா உன் காலம் நரைக்கும் நேரத்தில் என் நேரம் உனக்காக இருக்க போவதில்லை என்று தெரிந்தும் காக்கிறாய் உன் இமைக்குள் வைத்து என்னை கடமைக்காக அல்ல கடனுக்காக அல்ல கடவுளாக!
அறிமுகம்
அன்பை எனக்கு அறிமுகபடுத்தி இன்று வரை அளவின்றி ஆள்பவள் நீதானே அம்மா.
பாசம்
தாலாட்டுச் சாத்தம் கேட்டு நானும் உறங்கிட தாயே எனக்கு நீயும் வேண்டும். அன்பு என்னும் உயிர் தந்து உத்திரமேனும் பாலில் தேனெனும் அன்பை ஊட்டி பாசம் என்னும் பந்தாதை ஏற்படுத்தினாய்!
மறவாத அன்பு
கார்மேகம் என்னும் கருவரையில் கற்பனையில் ரசித்தவள் நகரும் மேகங்களை என் துன்பத்திலும் என்னுள் நகர்ந்தவள் உலகில் எதுணை அன்பெனும் கரங்கள் அலைத்தாலும் என் வாழ்வில் நான் மறவாத அன்பு என் தாயின் அன்பு!
பாக்கியம்
ஏழு ஜென்மங்களில் எனக்கு நம்பிகை இல்லை என் ஒரு ஜென்மம் எழுந்து உயிரிணமாய் பிறந்தால் உன்னை எந்தன் மகலாகும் பாக்கியம் மட்டும் போதும்!
ஜென்மம்
எந்த திசையிலும் உன் முகமே என்னை அரவணைத்திட பார்த்திடுதே அன்னை உந்தன் மதி சாய்ந்து கிடந்திட நூறு ஜென்மம் வந்து ஏங்குகிறேன் நித்தம் உந்தன் அன்பைப் பெற்ற விட ஏழு ஜென்மம் எனக்கு வேண்டும் என்பேன்
நீ தானே
நான் எத்தனை முறை உனக்கு கஷ்டங்கள் தந்தாலும் எனக்கு எப்போதும் சந்தோஷம் தருகிறவள் நீ தானே அம்மா
கருவறை
நீ திரும்ப அமர முடியாத ஒரே ஆசனம் உன் தாயின் கருவறை மட்டுமே
இல்லம்
அவன் இல்லத்தின் பெயரோ அன்னை இல்லம்..
அவன் அன்னை இருப்பதோ அனதை இல்லம்
எதுவும் இல்லை
எத்தனை சொந்தம் என் வாழ்வில் வந்தாலும் அம்மா உன் ஒரே பார்வையின் பந்தம் எதுவும் தந்ததில்லை
ஆயுள் காலம் வரை
நான் வளர்வது ஒவ்வொரு நொடியும் உனக்கு பாரம் தான் என தெரிந்தும் சுமக்கிறாய் பத்து மாதம் வரை மட்டும் அல்ல உன் ஆயுள் காலம் வரை