அம்மா கவிதை-வைரமுத்து

Vijaykumar 85 Views
2 Min Read

ஆயிரம் தான் கவி சொன்னேன் ….
அழகா அழகா பொய் சொன்னேன்….
பெத்தவளே உன் பெருமை
ஒத்தவரி சொல்லலியே ….
காத்து எல்லாம் மகன் பாட்டு….
காயிதத்தில் அவன் எழுத்து….
ஊர் எல்லாம் மகன் பேச்சு….
உன்கீர்த்தி எழுதலியே….
எழுதவோ படிக்கவோ இயலாத
தாய் பத்தி
எழுதி என்ன லாபம்ன்னு
எழுதாம போனேனோ….
பொன்னையாதேவன் பெத்த பொன்னே
குல மகளே….
என்னை புறம் தள்ள இடுப்பு வலி
பொறுத்தவளே….
வைரமுத்து பிறபான்னு
வயித்தில் நீ சுமந்தது இல்ல….
வயித்தில் நீ சுமந்த ஒன்னு
வைரமுத்து ஆயிருச்சு.
கண்ணு காது மூக்கோட கருப்பாய்
ஒரு பிண்டம்….
இடப்பக்கம் கெடகையில என்ன
என்ன நெனச்சிருப்ப….
கத்தி எடுப்பவனோ …களவான
பிறந்தவனோ….
தரணி ஆழ வந்திருக்கும்
தாசில்தார் இவன் தானோ….
இந்த விவரங்கள் ஏது ஒன்னும்
தெரியாம….
நெஞ்சு ஊட்டி வளத்த உன்ன
நெனச்சா அழுக வரும்….
கத கதனு களி கிண்டி….
களிக்குள்ள குழி வெட்டி….
கருப்பட்டி நல்லெண்ண கலந்து
தருவாயே….
தொண்ட இல இறங்கும்
சுகமான இளம் சூடு….
மண்டையில இன்னும் மச மசன்னு
நிக்குது அம்மா….
கொத்த மல்லி வறுத்து வச்சு….
குறு மொளகாய் ரெண்டு வச்சு….
சீரகமும் சிறுமிளகும்
சேர்த்துவச்சு வச்சு நீர்
தெளிச்சு ….
கும்மி அரைச்சு…நீ கொழ
கொழன்னு வழிகைல…அம்மி
மணக்கும்… அடுத்த தெரு
மணமணக்கும்……..
தித்திக்க சமைச்சாலும்….
திட்டிகிட்டே சமைச்சாலும்….
கத்திரிக்காய் நெய் வடியும்
கருவாடு தேன் ஒழுகும்….
கோழி கொழம்பு மேல குட்டி குட்டியா
மிதக்கும்….
தேங்க சில்லுக்கு தேகம் எல்லாம்
எச்சி உறும்….
வறுமை இல நாம பட்ட வலி
தாங்க மாட்டமா….
பேனா எடுத்தேன் …பிரபஞ்சம்
பிச்சு ஏறுஞ்சேன்….
பாசம் உள்ள வேளையிலே காசு
பணம் கூடலியே….
காசு வந்த வேளையிலே பாசம்
வந்து சேரலியே….
கல்யாணம் நான் செஞ்சு கதி யத்து
நிக்கைல ,பெத்த அப்பன் சென்னை
வந்து சொத்து எழுதி போன பின்னே….
அஞ்சு, ஆறு வருஷம் …உன் ஆசை
முகம் பாக்கமா பிள்ளை மனம்
பித்து ஆச்சே…பெத்த மனம் கல்லு
ஆச்சே….
படிப்பு படிச்சிகிட்டே பணம் அனுப்பி
வச்ச மகன் கை விட மாட்டான்னு
கடைசில நம்பலயே….
பாசம்….
கண்ணீர்….
பழைய கதை
எல்லாமே வெறுச்சோடி போன
வேதாந்தம் ஆயேடுச்சே ….
வைகை இல ஊரு முழுக….
வல்லோரும் சேர்த்து எழுக…கை
பிடிச்சு கூட்டி வந்து கர சேர்த்து
விட்டவளே….
எனக்கு ஒன்னு ஆனதுன உனக்கு
வேறு பிள்ளை உண்டு …உனக்கு ஒன்னு
ஆனதுன எனக்கு வேறு தாய்
இருக்கா………..?

Share This Article
Exit mobile version