ஆவாரம் பூவின் அற்புதமான மருத்துவக் குணங்கள்.!!

Selvasanshi 6 Views
1 Min Read

ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது பல நோய்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக சர்க்கரை நோயைக் முற்றிலும் குணப்படுத்த ஆவாரம் பூ மிகவும் உதவுகிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் 50 சதவீத மக்கள் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர்.

இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த மாத்திரைகள், இன்சுலின் ஊசிகள் என்று பலவும் எடுத்து கொள்கிறார்கள். இது பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், உணவு வகைகளில் ஆவாரம் பூவை சேர்த்து கொண்டால் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் இந்நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.

ஆவாரம் பூவில் குடிநீர், துவையல், பருப்பு கலந்து கூட்டு ஆகியவை செய்து சாப்பிடலாம். ஆவாரம்பூ உடன் பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து நெய் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் ஆவாரம் பூக்களை கொண்டு தேநீர் தயாரித்து குடிக்கலாம். ஆவாரம் பூவில் ரசம், குழம்பு வைத்தும் சாப்பிடலாம். ஆவாரம் பூக்களை நிழலில் காய வைத்து பொடி செய்து உபயோகிக்கலாம்.

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காய வைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக பருகி வந்தால் உடல் சூடு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண், பித்த அதிகரிப்பு ஆகியவை குணமாகும். இந்த குடிநீர் சர்க்கரை நோயாளிக்கு மிக சிறந்த மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது.

இந்த மூலிகை குடிநீர் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். மேலும் இது பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை குணப்படுத்தும். இந்த மூலிகை குடிநீரை தினமும் பருகி வந்தால் உடல் நோயின்றி அரோக்கியமாக இருக்கும்.

ஆவாரையில் உள்ள சத்துக்கள் உடலுக்குள் சென்று உடல் உறுப்புகளை பலப்படுத்தும் என்கிறது சித்தமருத்துவம். பக்க விளைவில்லாமல் உடலுக்கு நல்ல மருந்தாகவும், ருசியான உணவாகவும் ஆவாரை இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்கிறார்கள் சித்தமருத்துவர்கள்.

Share This Article
Exit mobile version