கொத்தவரங்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..!!

நம் நாட்டில் பல வகையானா காய்கறிகள் விளைகின்றன. ஆனால் ஒரு சில காய்கறிகளை மட்டுமே நாம் அன்றாட உணவுகளில் பயன்படுத்துகிறோம். கொத்தவரங்காய் போன்ற காய்கறிகளை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை. கொத்தவரங்காயை ஒரு அருமருந்து என்றே நாம் கூறலாம். ஏன்னெனில் கொத்தவரங்காயில் ஏரளமான உயிர் சத்துக்கள் இருக்கிறது.

கொத்தவரங்காயில் வைட்டமின் கே, போலிக் அமிலம், நீரில் கரையும் நார்ச்சத்து மற்றும் நீரில் கரையாத நார்ச்சத்து என இருவகை நார்ச்சத்துக்களும் உள்ளன. கால்சியம், சுண்ணாம்புச்சத்து, இரும்பு சத்து மற்றும் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்த உதவும் கிளைக்கோ நியூட்டிரியன்ட் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளது. இருந்தாலும் இதன் மதிப்பு யாருக்கும் தெரியவில்லை. அதனால் தான் இது மலிவான விலைக்கு கிடைக்கிறது.

கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

  • கொத்தவரங்காய் நம் ஊடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இது உடலில் சர்க்கரையின் அளவையும் சமபடுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் மூட்டு வலி, அஜீரண கோளாறு போன்றவற்றையும் சரி செய்கிறது.
  • ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைப்பதோடு, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் கொத்தவரங்காய் அதிகரிக்க செய்கிறது.
  • இதய நோய் வராமல் தடுக்கும் ஆற்றலை கொண்ட கொத்தவரங்காய், ஆஸ்துமாவிற்கு ஒரு நல்ல மருந்து என்று கூறலாம். இது சிறந்த கிருமி நாசினி மட்டுமல்ல, நல்ல வலி நிவாரணி, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
  • கர்ப்பிணி பெண்கள் வாரத்தில் இரு முறை கொத்தவரங்காயை சாப்பிட்டால், கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். கருவில் உள்ள குழந்தைகளின் எழும்பு மற்றும் முதுகு தண்டு வளர்ச்சிக்கு கொத்தவரங்காய் பெரிதும் உதவுகிறது.
  • உடல் எடையை குறைக்க உதவும் வேதிபண்புகள் கொத்தவரங்காயில் அதிகம் உள்ளது என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
  • ஒவ்வாமையை போக்க கூடிய கொத்தவரங்காய், மன அழுத்தத்தை குறைப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் சரி செய்கிறது. இது மட்டுமல்லாமல் சரும பிரச்சினையை தீர்க்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது, ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது என்று கொத்தவரங்காயின் மருத்துவ பயன்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
  • கொத்தவரங்காயின் இன்னும் சில முக்கியமான பண்புகளை பற்றி தெரிந்துக் கொள்வோம். அடிக்கடி கொத்தரவரங்காயை நம் உணவில் எடுத்து கொண்டால் உடல் சூடு குறையும். அம்மை நோயை மூன்று நாட்களில் சரி செய்யும் ஆற்றல் கொத்தவரங்காயில் உள்ளதாம். அதுமட்டுமல்ல, கொரோனா நோயை விரைவில் குணப்படுத்த கொத்தவரங்காய் நல்ல மருந்தாக செயல்படுகிறதாம்.
spot_img

More from this stream

Recomended