கடலுக்கு மாற்று பெயர் என்ன

Vijaykumar 69 Views
9 Min Read
1)அடங்காவாரிதி
அடங்காத + வாரிதி = எப்போதும் அடங்காமல் ஆர்ப்பரிக்கும் தென் கடல்.
2)அத்தி
உயிர் ( விதை) நிறைந்த அத்திப்பழம் போன்ற கடல்.
அத்திக்கு வித்தனையும் (அஷ்டப். திருவேங்கடத்தந்தாதி -33).
3)அபாம்பதி
அபாகம் + பதி =பகுக்க முடியா கடவுள்
சிந்தாமணி நிகண்டில் அபாம்பதி என்ற சொல் காணப்படும் செய்யுள் எண் 185 கடல் என பொருள்படும்.
4)அம்பரம்
அம் + பரம் = நீர் கடவுள்
எரிகணை யேவ வம்பரமுற்றது. (பாரத. பதினான். 93)
5)அம்புதி
அம்+புதிர் = நீர் ரகசியம்
6)அம்புநிதி
நீர்+புநிதம் = புனித நீர். (சிந்தாமணி நிகண்டு -205)
7)அம்புவி
நீர்+புவி= நீர் நிறைந்த புவி பரப்பு.
8)அம்போதி
சீயன் அம்போதி கடைந்தான் மருகன் செப்ப திகைத்தார்
அம்போதி கடைந்தான் … பாற்கடலை கடைந்தவனாகிய திருமாலின்
கந்தர் அந்தாதி- அருணகிரிநாதர்
9)அரலை
சூடாமணி நிகண்டு கடல் என்கிறது.
10) அரி
பிங்கல நிகண்டு கடல் என்கிறது.
11)அருணவம், கார்கால மாயக்கடல்
அரு+ நவம்
அரு = மாயை
நவம்= கார்காலம்
(பிங்கல நிகண்டு )
அருவினி லுருவந் தோன்றி (சி. சி 1, 27)
12)அலை
அலை கடலில் மட்டும் தோன்றுவதால் அலை என்றாலே கடல்தான்.
அலைவளம் பெரிதென்கோ (நைடத.நாட்டு. 22)
13)அலைநீர்
அலையடிக்கும் நீர் – கடல்
14)அலைவாய்
அலையை வாயாக கொண்டது – கடல்
15)அவாரபாரம்
அ+ வார்+ பாரம்
கடவுள்+ நீர் + பூமி
கடவுள் கொடுத்த நீரை தாங்கும் பூமி – கடல்
திருமால் அவ்வென்சொற் பொருளாவான் (பாகவ. சிசுபா. 20)
நீர். (சூடா.)வாராயிர முகமா நுகர்மஞ்சு (பாரத. அருச்சுனன்றவ.159)
16)அழுவம்
ஆழம் மிகுந்த கடல் பகுதி லோப்பு.
17)அளக்கர்
உப்பை உருவாக்குவதால் கடலுக்கு அளக்கர் எனலாம்.
அங்கண்மா ஞாலஞ் சூழு மளக்கர் (கந்தபு. ஆற்று 36)
18)அன்னவம்
சூடாமணி நிகண்டு கடல் என்கிறது.
19)ஆர்கலி
வெள்ளம் கடலில் சேரும் கடல் உதாரணமாக தாமரா என்ற கல்கத்தாவில் உள்ள கடல் பரப்பு இந்த நீர் உப்பு தன்மை குறைவாக இருக்கும் கடல் வென்மையாக இருக்கும்.
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி (புறநானூறு -91)
20)ஆலம்
கடல்மீது மழை பொழியும் போது கடலுக்கு ஆலம் என பெயர்.
21)ஆழம்
கடலில் அதிகமான நீர் அளவை குறிக்கும் பெயர்.
22)ஆழி
ஆழி என்பது கடலில் இரண்டு தீவிற்கு இடைப்பட்ட பகுதியில் நீரின் ஆழம் மிக குறைவாக இருக்கும் அங்கே கடற்கரையில் அடிக்கும் அலையை விட வித்யாசமாக கடல் விரியும் அதை ஆழி என்கிறோம் இந்த ஆழி மிக கடுமையானது கப்பல் கூட மூழ்கிப்போகும்.
கடலில் பாறை உயர்ந்து காணப்படும் பகுதி மற்றும் கடல் திட்டு ( பொட்டல்) பகுதியில் ஆழி உருவாகும்.
வென் நுரை கக்கும் கடல் ஆழி
பெருங்கடற் காழியனையன். (புறநானூறு. 330)
23)இரத்தினகருப்பம்
சமுத்திரம் என பொருள் படும்.
24)இரத்தினாகரம்,
தனுஷ்கோடிக்கு வடக்குள்ள கடல்.
25) உததி
அமுத உததி விடம் உமிழும் செம் கண் … அமுதமாகிய திருப்பாற்
கடலில் தோன்றிய நஞ்சைக் கக்கும் சிவந்த கண்களையும், (திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 23)
ஒருததிகாட்டுமால் (இரகு. நாட்டுப். 41)
26)உந்தி
கடல் உந்தியுலகத்தில் (சி.சிடர் உலோக 1)
27)உரகடல்
அடி காற்று சமயத்தில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் இதை உரகடல் என்கிறோம்.
28)உரவுநீர்
கடல் என பொருள்
முள்வாய் சங்கம் முறை முறை ஆர்ப்ப
உரவுநீர்ப் பரப்பினூர் துயில் எடுப்பி (சிலப். 4, 79)
29)உலாவுநீர்
நீவாடு அதிகம் உள்ள நேரத்தில் கடலின் பெயர்.
30)உவரி
உவர் நிலத்து வியாபார பட்டணம்
உலகம் எதிர்பார்க்கும் பட்டணம் என்கிறது கிழே உள்ள பாடல்.
‘திருகு வெஞ் சினத்து அரக்கரும் கரு நிறம் தீர்ந்தார்;
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது; -அழகைப்
பருகும் இந் நகர்த் துன் ஒளி பாய்தலின், -பசும் பொன்
உருகுகின்றது போன்று உளது, உலகு சூழ் உவரி. 15
உலகுசூ ழுவரி (கம்பராமாயணம் 15)
31)உவா
பிங்கல நிகண்டு கடல் என்கிறது.
32)ஊர்திரைநீர்
ஆதிரையான் ஆதிரையான் என்றே அயருமால் ஊர்திரைநீர் வேலி உலகு” என முத்தொள்ளாயிரம் கடவுள் வாழ்த்துப் பாடல் சிவபெருமானை “ஆதிரையான்’ என்ற பெயரிட்டுக் காட்டியது. உலகமே அப்பெயரைச் சொல்லி அயரும் என்றது. பெரியாழ்வார் பாடல்,
33)எற்றுந்திரை,
ஏற்றுந்திரை. சிராபெறுந்தம. வெனினும். எற்றுந்திரை. சீறூர்ப் பெருந்தம்.
கல்லாடர் எழுதிய – கல்லாடம்
34)ஓதம்
கடல் வற்று பெருக்கை குறிக்கும் வார்த்தை.
ஓதம் (Tide) என்பது நிலவு, சூரியன் போன்ற விண்வெளி பொருட்களால் கடலில் உள்ள நீர்மட்டம் உயர்வதையும் தாழ்வதையும் குறிக்கும். ஆழ்கடல் பரப்புத் தவிர்ந்த தரையும் கடலும் சார்பரப்பில் உருவாகும் ஓதங்களைப் பொதுவாக இரு வகைகளாகக் குறிப்பிடலாம். ஒன்று கழி ஓதம் – மற்றையது கடல் ஓதம்.
இவற்றை பாம்பன் பாலத்தில் கடலின் வற்று – பெருக்கு – நீர் மாறல் நிலைகளைத் தெளிவாகப் பார்க்கமுடியும்.
ஓதத்தை (Tide) இரண்டு வகையாக்கி கழி ஓதம்(Tide towards the Shore – High tide) கடல் ஓதம்(Tide towards the Sea – Low Tide) என இரண்டாகப் பிரித்தனர் பரதவர்கள்.
35)ஓதவனம்
கடல் பெருக்கை குறிக்கும் பெயர்.
அறையோதவனஞ்சூழ் புவி (பாரத. அருச்சுனன்றீர். 2)
36)ஓலம்
கடல் ஓலமிடுவதை குறிக்கும் பெயர்.
37)கடல்
இங்கே எழுதபட்டு உள்ள அனைத்தும் இதை சார்ந்து தான்.
38)கடும்புனல்
வேகமான நீவாடு
காமக்கடும்புன னீந்திக் கரைகாணேன் (குறள், 1167)
39)கயம்
ஆழமான துறைமுகம் இயற்கை துறைமுகம் ஒரிசாவில் உள்ள பாரதீப் துறைமுகம் போன்றது.
கயங்கரந்துறையரக்கரை (உபதேசகா. விபூதி 201).
ஆழம் கணிச்சிகளிற் கயம்பட நன்கிடித்து(சீவக. 592).
40)கலி
பிங்கல நிகண்டு கடல் என்கிறது.
41)கழி
கடலையடுத்த உப்புநீர்ப் பரப்பு தரவை
மாக்கழி மலர்ந்த நெய்தலானும்(புறநா. 48, 3)
42)கார்கோள்
நீர் உலகம் என பொருள் படும் கடல்.
43)கார்மலி
நீரால் நிரப்பப்பட்ட என பொருள் படும் கடல்.
44)கார்வலயம்,
பூகோளத்தின் நீர் பகுதி என பொருள் படும்.
45)கிடங்கர்
திரைக்கிடங்கர்சூழ் குவலயப்பரப்பில் (உபதேசகா. விபூதி 35)
46)கிருபீடபாலம்
யாழ். அகராதி கடல் என பொருள் கூறுகிறது.
47)கூபாரம்
கூ+ பாரம்
பூமியின் பாரமான பகுதி என்பதால் கடல்.
48)சகரநீர்
சகரர்தோண்டிய கடல் என பெருள்.
49)சசி
நிகண்டு கடல் என்றும் அர்த்தம் கூறுகிறது.
50)சமுத்திரம்
பிங்கல நிகண்டு கடல் என்கிறது.
51)சலநிதி
கடல் என பொருள்.
தகுசலநிதிநிறை தரத்த தாயினும் (இரகு. திக்குவி. 29).
52)சலராசி
கடல்லோடு தொடர்புடைய நண்டு, மீன் முதலியவற்றின் ராசி பற்றி குறிக்கும் வார்த்தை.
53)சாகரம்
சகரர்தோண்டிய கடல் என பெருள்.
54)சிந்து
சிந்து என்றால் கடல் என்றே பொருள் பரதவரில் இரண்டு பரதவர் உண்டு.
ஒருவர் சிந்து பரதவர் மற்றவர் கங்கை பரதவர்
சிந்து பரதவர் என்றால் கடல் பரதவர் என்றும் கங்கை பரதவர் என்றால் நதியில் மீன் பிடிப்பவர் என்றும் பொருள்.
இதே பரதகுலத்தால் உருவாக்கபட்ட நாகரிகம் தான் சிந்து நாகரிகம்
55)சிந்துவாரம்
கடற்கரை என பொருள் படும்.
56)சூழி
கடல் என்கிறது நிகண்டு.
57)தரங்கம்
கடல் அலைக்கு மறு பெயர்.
நீர்த்தரங்க நெடுங்கங்கை (பெரியபு. தடுத்தாட். 165)
58)தவிசம்
யாழ் அகராதி கடல் என்கிறது.
59)திமிகோடம்
திமிங்கலம் வாழும் இடம் ஆகவே கடல் என பொருள் படும்.
60)திரை
அலை என பொருள் படும்.
.
திரை கடலோடியுந் திரவியந்தேடு
61)துனிநாதம்
கடல் என பொருள்.
62)தெண்டிரை
கடல் தெளிவை குறிக்கும் பெயர்.
63)தேனம்
யாழ் அகராதி சமுத்திரம் என்கிறது.
64)தொன்னீர்
தொல்+ நீர் கடல் என பொருள்படும்.
65)தோயதி,
யாழ் அகராதி கடல் என்கிறது.
66)தோயம்
கடல் என பொருள்.
தோயமுஞ் சுவறப் பொரும்வேலா (திருப்பு. 101)
67)தோழம்
கடல் என பொருள் படும்.
முதிர்திரை யடிக்கும் பரிதியந் தோழம் (கல்லா.88, 23)
68)நதாதிபதி
நதிகளின் அதிபதி கடல்.
69)நதிபதி
நீர் கடவுள் வருணனை குறிக்கும்.
70)நதீனம்
யாழ் அகராதி கடல் என்கிறது.
71)நரலை
அலைபாயும் கடல் பொருள்.
நரலையுட் டனிபுக் காடார் மடந்தைய ரென்ப (திருவாலவா. 9, 3)
72)நாமநீர்
புயல் சமயத்தில் அச்சத்தைத்தரும் கடல்.
நாமநீர்வைப்பில் (குறள், 149).
73)நித்தியம்
யாழ் அகராதி சமுத்திரம் என்கிறது.
74)நீரதி,
யாழ் அகராதி சமுத்திரம் என்கிறது.
75)நீரநிதி
நிகண்டு கடல் என்கிறது.
76) நீராழி
பிங்கல நிகண்டு கடல் என்கிறது.
77)நீர்
கடல் என்றும் பொருள்.
நீரொலித்தன்ன(மதுரைக். 369)
78) நெடுநீர்
கடல் என பொருள் படும்.
79)நெடுங்கடல்
கரையடுத்த கடல் என பொருள்.
80)நேமி
திவாகர நிகண்டு கடல் என்கிறது.
81)பயோததி
பாற்கடல் என பொருள்படும்.
திரைகெழு பயோததிதுயிலும் தெய்வவான் மரகதமலை (கம்பரா. திருவவ.12)
82)பயோதி
கடல் என பொருள் படும்.
பயோதிபோற் சூழ்ந்ததாமே
(மேருமந். 1077)
83)பயோநிதி
கடல் என கூறுகிறது யாழ் அகராதி.
84)பரவை
பரந்து விரிந்த கடல்.
பாய்திரைப் பரவை மீமிசைமுகிழ்த்த (பதினொன்றாம் திருமுறை பட்டினத்து பிள்ளையார் திருக்கழு. 1)
85)பரு,
யாழ் அகராதி கடல் என்கிறது.
86)பாராவாரம்
கடல் என பொருள் படும்.
பாராவாரம் பல்வளம் பழுநியகாராளர் சண்பை (மணி. 3, 28)
87)பாழி
நிகண்டு கடல் என்கிறது.
88)புணரி
உலகு சூழ்ந்த நெடும்புணரி (திவ். பெரியதி. 8,6, 5)
89)பெருங்கடல்
90)பெருநீர்
பெருநீர் போகு மிரியன் மாக்களொடு
(சிலப். 6, 112)
91)பெருவனம்
செறிந்த பன்மணிப் பெருவனம் (கம்பரா.முதற். 246).
92)பேரு
யாழ் அகராதி சமுத்திரம் என்கிறது.
93)பௌவம்
ஆழம் மற்றும் கடல் என பொருள்படும்.
94)மகரசலம்
மகரசலந்தரளந் தருவே தவனத்தன் (மறைசை. 90).
95)மகரநீர்
இனமழை மகரநீரை முடிவுற முகப்ப (கம்பரா. குகப். 49)
96)மகராங்கம்
யாழ் அகராதி கடல் என்கிறது.
97)மகரி
நிகண்டு கடல் என்கிறது.
98)மகாகச்சம்
யாழ் அகராதி கடல் என்கிறது.
99)மகாசயம்
யாழ் அகராதி சமுத்திரம் என்கிறது.
100)மகான்னவம்
யாழ் அகராதிகடல் என்கிறது.
101)மகீப்பிராசீரம்
பூமியைவேலியாக வுடையதுகடல்.
102)மகோததி
மகோததி வளாவும் பூதலம் (கம்பரா. தேரேறு. 42)
103)மாதங்கம்
நிகண்டு கடல் என்கிறது.
104)மாதோயம்
மாதோயந்தன்னை வயிறலைத்து (கந்தபு. தேவரையே. 17).
105)மாறாநீர்
மாறாநீர் வையக் கணி (குறள்,707, மணக்.).
106)மிருதோற்பவம்
யாழ் அகராதி கடல் என்கிறது.
107)மீரம்
சமுத்திரம் என்கிறது யாழ் அகராதி
108)மீனாலயம்
மீன்களின் இருப்பிடமான கடல்
109)முண்டகம்
நிகண்டு கடல் என்கிறது.
110)முதனீர்
கடல் என்கிறது நிகண்டு
111)முதுகயம்
முதுகயந் தீப்பட (திவ். பெரியதி. 8, 5, 6)
112) முதுநீர்
நிலத்துக்கு முந்தியது என பெருள்படும் கடல்.
113)முந்நீர்
ஆற்றுநீர், ஊற்றுநீர்,மழைநீர் என்ற மூன்று நீர்களை உடையது.
முந்நீர் விழவி னெடியோன் (புறநானூறு 9)
114)முன்னீர்
நிலத்துக்கு முன் தோன்றியதான கடல்
115)யாதபதி
யாழ் அகராதி கடல் என்கிறது.
116)வாங்கம்
யாழ் அகராதிகடல் என்கிறது.
117)வாகினீபதி
சமுத்திரம் என யாழ் அகராதி கூறுகிறது.
118)வாரகம்
கடல்என பொருள் படும் நிகண்டு
119)வாரம்
கடற்கரையை குறிக்கும்.
120)வாராகரம்
கடல் என நிகண்டு கூறுகிறது.
121)வாரிதி
எழுவாரிதி கழியப்பாய (தக்கயாகப். 269).
122)வாரிநிதி
யாழ் அகராதி கடல் என்கிறது.
123)வாரிராசி
யாழ் அகராதி கடல் என்கிறது.
124)வாரீசம்
நிகண்டு கடல் என்கிறது.
125)வாருணம்
பிங்கல நிகண்டு கடல் என்கிறது.
126)விரிநீர்
ஆழியின் மருபெயர்.
127)வீசிமாலி
நிகண்டு கடல் என்கிறது.
128)வீரை
திரைவீரை (திருவிசை. திருமாளி. 3, 5).
129)வெள்ளம்
கடல் பெருக்கை குறிக்கும்.
வெள்ளந்தாழ் விரிசடையாய் (திருவாச. 3, 1).
130)வேலாவலையம்
பூமியின் எல்கை என பொருள்.
131)வேலை
கடற்கரை
பௌவவேலை (கந்தபு. மேருப். 46)
Share This Article
Exit mobile version