1)அடங்காவாரிதி |
அடங்காத + வாரிதி = எப்போதும் அடங்காமல் ஆர்ப்பரிக்கும் தென் கடல். |
|
2)அத்தி |
உயிர் ( விதை) நிறைந்த அத்திப்பழம் போன்ற கடல். |
அத்திக்கு வித்தனையும் (அஷ்டப். திருவேங்கடத்தந்தாதி -33). |
|
3)அபாம்பதி |
அபாகம் + பதி =பகுக்க முடியா கடவுள் |
சிந்தாமணி நிகண்டில் அபாம்பதி என்ற சொல் காணப்படும் செய்யுள் எண் 185 கடல் என பொருள்படும். |
|
4)அம்பரம் |
அம் + பரம் = நீர் கடவுள் |
எரிகணை யேவ வம்பரமுற்றது. (பாரத. பதினான். 93) |
|
5)அம்புதி |
அம்+புதிர் = நீர் ரகசியம் |
|
6)அம்புநிதி |
நீர்+புநிதம் = புனித நீர். (சிந்தாமணி நிகண்டு -205) |
|
7)அம்புவி |
நீர்+புவி= நீர் நிறைந்த புவி பரப்பு. |
|
8)அம்போதி |
சீயன் அம்போதி கடைந்தான் மருகன் செப்ப திகைத்தார் |
அம்போதி கடைந்தான் … பாற்கடலை கடைந்தவனாகிய திருமாலின் |
கந்தர் அந்தாதி- அருணகிரிநாதர் |
|
9)அரலை |
சூடாமணி நிகண்டு கடல் என்கிறது. |
|
10) அரி |
பிங்கல நிகண்டு கடல் என்கிறது. |
|
11)அருணவம், கார்கால மாயக்கடல் |
அரு+ நவம் |
அரு = மாயை |
நவம்= கார்காலம் |
(பிங்கல நிகண்டு ) |
அருவினி லுருவந் தோன்றி (சி. சி 1, 27) |
|
12)அலை |
அலை கடலில் மட்டும் தோன்றுவதால் அலை என்றாலே கடல்தான். |
அலைவளம் பெரிதென்கோ (நைடத.நாட்டு. 22) |
|
13)அலைநீர் |
அலையடிக்கும் நீர் – கடல் |
|
14)அலைவாய் |
அலையை வாயாக கொண்டது – கடல் |
|
15)அவாரபாரம் |
அ+ வார்+ பாரம் |
கடவுள்+ நீர் + பூமி |
கடவுள் கொடுத்த நீரை தாங்கும் பூமி – கடல் |
திருமால் அவ்வென்சொற் பொருளாவான் (பாகவ. சிசுபா. 20) |
நீர். (சூடா.)வாராயிர முகமா நுகர்மஞ்சு (பாரத. அருச்சுனன்றவ.159) |
|
16)அழுவம் |
ஆழம் மிகுந்த கடல் பகுதி லோப்பு. |
|
17)அளக்கர் |
|
|
உப்பை உருவாக்குவதால் கடலுக்கு அளக்கர் எனலாம். |
அங்கண்மா ஞாலஞ் சூழு மளக்கர் (கந்தபு. ஆற்று 36) |
|
18)அன்னவம் |
சூடாமணி நிகண்டு கடல் என்கிறது. |
|
19)ஆர்கலி |
வெள்ளம் கடலில் சேரும் கடல் உதாரணமாக தாமரா என்ற கல்கத்தாவில் உள்ள கடல் பரப்பு இந்த நீர் உப்பு தன்மை குறைவாக இருக்கும் கடல் வென்மையாக இருக்கும். |
|
ஆர்கலி நறவின் அதியர் கோமான் |
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி (புறநானூறு -91) |
|
20)ஆலம் |
கடல்மீது மழை பொழியும் போது கடலுக்கு ஆலம் என பெயர். |
|
21)ஆழம் |
கடலில் அதிகமான நீர் அளவை குறிக்கும் பெயர். |
|
22)ஆழி |
ஆழி என்பது கடலில் இரண்டு தீவிற்கு இடைப்பட்ட பகுதியில் நீரின் ஆழம் மிக குறைவாக இருக்கும் அங்கே கடற்கரையில் அடிக்கும் அலையை விட வித்யாசமாக கடல் விரியும் அதை ஆழி என்கிறோம் இந்த ஆழி மிக கடுமையானது கப்பல் கூட மூழ்கிப்போகும். |
|
கடலில் பாறை உயர்ந்து காணப்படும் பகுதி மற்றும் கடல் திட்டு ( பொட்டல்) பகுதியில் ஆழி உருவாகும். |
|
வென் நுரை கக்கும் கடல் ஆழி |
பெருங்கடற் காழியனையன். (புறநானூறு. 330) |
|
23)இரத்தினகருப்பம் |
சமுத்திரம் என பொருள் படும். |
|
24)இரத்தினாகரம், |
தனுஷ்கோடிக்கு வடக்குள்ள கடல். |
|
25) உததி |
அமுத உததி விடம் உமிழும் செம் கண் … அமுதமாகிய திருப்பாற் |
கடலில் தோன்றிய நஞ்சைக் கக்கும் சிவந்த கண்களையும், (திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 23) |
|
ஒருததிகாட்டுமால் (இரகு. நாட்டுப். 41) |
|
26)உந்தி |
கடல் உந்தியுலகத்தில் (சி.சிடர் உலோக 1) |
|
27)உரகடல் |
அடி காற்று சமயத்தில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் இதை உரகடல் என்கிறோம். |
|
28)உரவுநீர் |
கடல் என பொருள் |
முள்வாய் சங்கம் முறை முறை ஆர்ப்ப |
உரவுநீர்ப் பரப்பினூர் துயில் எடுப்பி (சிலப். 4, 79) |
|
29)உலாவுநீர் |
நீவாடு அதிகம் உள்ள நேரத்தில் கடலின் பெயர். |
|
30)உவரி |
உவர் நிலத்து வியாபார பட்டணம் |
உலகம் எதிர்பார்க்கும் பட்டணம் என்கிறது கிழே உள்ள பாடல். |
|
‘திருகு வெஞ் சினத்து அரக்கரும் கரு நிறம் தீர்ந்தார்; |
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது; -அழகைப் |
பருகும் இந் நகர்த் துன் ஒளி பாய்தலின், -பசும் பொன் |
உருகுகின்றது போன்று உளது, உலகு சூழ் உவரி. 15 |
|
உலகுசூ ழுவரி (கம்பராமாயணம் 15) |
|
31)உவா |
பிங்கல நிகண்டு கடல் என்கிறது. |
|
32)ஊர்திரைநீர் |
ஆதிரையான் ஆதிரையான் என்றே அயருமால் ஊர்திரைநீர் வேலி உலகு” என முத்தொள்ளாயிரம் கடவுள் வாழ்த்துப் பாடல் சிவபெருமானை “ஆதிரையான்’ என்ற பெயரிட்டுக் காட்டியது. உலகமே அப்பெயரைச் சொல்லி அயரும் என்றது. பெரியாழ்வார் பாடல், |
|
33)எற்றுந்திரை, |
ஏற்றுந்திரை. சிராபெறுந்தம. வெனினும். எற்றுந்திரை. சீறூர்ப் பெருந்தம். |
கல்லாடர் எழுதிய – கல்லாடம் |
|
34)ஓதம் |
கடல் வற்று பெருக்கை குறிக்கும் வார்த்தை. |
ஓதம் (Tide) என்பது நிலவு, சூரியன் போன்ற விண்வெளி பொருட்களால் கடலில் உள்ள நீர்மட்டம் உயர்வதையும் தாழ்வதையும் குறிக்கும். ஆழ்கடல் பரப்புத் தவிர்ந்த தரையும் கடலும் சார்பரப்பில் உருவாகும் ஓதங்களைப் பொதுவாக இரு வகைகளாகக் குறிப்பிடலாம். ஒன்று கழி ஓதம் – மற்றையது கடல் ஓதம். |
|
இவற்றை பாம்பன் பாலத்தில் கடலின் வற்று – பெருக்கு – நீர் மாறல் நிலைகளைத் தெளிவாகப் பார்க்கமுடியும். |
ஓதத்தை (Tide) இரண்டு வகையாக்கி கழி ஓதம்(Tide towards the Shore – High tide) கடல் ஓதம்(Tide towards the Sea – Low Tide) என இரண்டாகப் பிரித்தனர் பரதவர்கள். |
|
35)ஓதவனம் |
கடல் பெருக்கை குறிக்கும் பெயர். |
அறையோதவனஞ்சூழ் புவி (பாரத. அருச்சுனன்றீர். 2) |
|
36)ஓலம் |
கடல் ஓலமிடுவதை குறிக்கும் பெயர். |
|
37)கடல் |
இங்கே எழுதபட்டு உள்ள அனைத்தும் இதை சார்ந்து தான். |
|
38)கடும்புனல் |
வேகமான நீவாடு |
காமக்கடும்புன னீந்திக் கரைகாணேன் (குறள், 1167) |
|
39)கயம் |
ஆழமான துறைமுகம் இயற்கை துறைமுகம் ஒரிசாவில் உள்ள பாரதீப் துறைமுகம் போன்றது. |
கயங்கரந்துறையரக்கரை (உபதேசகா. விபூதி 201). |
ஆழம் கணிச்சிகளிற் கயம்பட நன்கிடித்து(சீவக. 592). |
|
40)கலி |
பிங்கல நிகண்டு கடல் என்கிறது. |
|
41)கழி |
கடலையடுத்த உப்புநீர்ப் பரப்பு தரவை |
மாக்கழி மலர்ந்த நெய்தலானும்(புறநா. 48, 3) |
|
|
|
42)கார்கோள் |
நீர் உலகம் என பொருள் படும் கடல். |
|
43)கார்மலி |
நீரால் நிரப்பப்பட்ட என பொருள் படும் கடல். |
|
44)கார்வலயம், |
பூகோளத்தின் நீர் பகுதி என பொருள் படும். |
|
45)கிடங்கர் |
திரைக்கிடங்கர்சூழ் குவலயப்பரப்பில் (உபதேசகா. விபூதி 35) |
|
46)கிருபீடபாலம் |
யாழ். அகராதி கடல் என பொருள் கூறுகிறது. |
|
47)கூபாரம் |
கூ+ பாரம் |
பூமியின் பாரமான பகுதி என்பதால் கடல். |
|
48)சகரநீர் |
சகரர்தோண்டிய கடல் என பெருள். |
|
49)சசி |
நிகண்டு கடல் என்றும் அர்த்தம் கூறுகிறது. |
|
50)சமுத்திரம் |
பிங்கல நிகண்டு கடல் என்கிறது. |
|
51)சலநிதி |
கடல் என பொருள். |
தகுசலநிதிநிறை தரத்த தாயினும் (இரகு. திக்குவி. 29). |
|
52)சலராசி |
கடல்லோடு தொடர்புடைய நண்டு, மீன் முதலியவற்றின் ராசி பற்றி குறிக்கும் வார்த்தை. |
|
53)சாகரம் |
சகரர்தோண்டிய கடல் என பெருள். |
|
54)சிந்து |
சிந்து என்றால் கடல் என்றே பொருள் பரதவரில் இரண்டு பரதவர் உண்டு. |
ஒருவர் சிந்து பரதவர் மற்றவர் கங்கை பரதவர் |
சிந்து பரதவர் என்றால் கடல் பரதவர் என்றும் கங்கை பரதவர் என்றால் நதியில் மீன் பிடிப்பவர் என்றும் பொருள். |
இதே பரதகுலத்தால் உருவாக்கபட்ட நாகரிகம் தான் சிந்து நாகரிகம் |
|
55)சிந்துவாரம் |
கடற்கரை என பொருள் படும். |
|
56)சூழி |
கடல் என்கிறது நிகண்டு. |
|
57)தரங்கம் |
கடல் அலைக்கு மறு பெயர். |
நீர்த்தரங்க நெடுங்கங்கை (பெரியபு. தடுத்தாட். 165) |
|
58)தவிசம் |
யாழ் அகராதி கடல் என்கிறது. |
|
59)திமிகோடம் |
திமிங்கலம் வாழும் இடம் ஆகவே கடல் என பொருள் படும். |
|
60)திரை |
அலை என பொருள் படும். |
. |
திரை கடலோடியுந் திரவியந்தேடு |
|
61)துனிநாதம் |
கடல் என பொருள். |
|
62)தெண்டிரை |
கடல் தெளிவை குறிக்கும் பெயர். |
|
63)தேனம் |
யாழ் அகராதி சமுத்திரம் என்கிறது. |
|
64)தொன்னீர் |
தொல்+ நீர் கடல் என பொருள்படும். |
|
65)தோயதி, |
யாழ் அகராதி கடல் என்கிறது. |
|
66)தோயம் |
கடல் என பொருள். |
தோயமுஞ் சுவறப் பொரும்வேலா (திருப்பு. 101) |
|
67)தோழம் |
கடல் என பொருள் படும். |
முதிர்திரை யடிக்கும் பரிதியந் தோழம் (கல்லா.88, 23) |
|
68)நதாதிபதி |
நதிகளின் அதிபதி கடல். |
|
69)நதிபதி |
நீர் கடவுள் வருணனை குறிக்கும். |
|
70)நதீனம் |
யாழ் அகராதி கடல் என்கிறது. |
|
71)நரலை |
அலைபாயும் கடல் பொருள். |
நரலையுட் டனிபுக் காடார் மடந்தைய ரென்ப (திருவாலவா. 9, 3) |
|
72)நாமநீர் |
புயல் சமயத்தில் அச்சத்தைத்தரும் கடல். |
|
நாமநீர்வைப்பில் (குறள், 149). |
|
73)நித்தியம் |
யாழ் அகராதி சமுத்திரம் என்கிறது. |
|
74)நீரதி, |
யாழ் அகராதி சமுத்திரம் என்கிறது. |
|
75)நீரநிதி |
நிகண்டு கடல் என்கிறது. |
|
76) நீராழி |
பிங்கல நிகண்டு கடல் என்கிறது. |
|
77)நீர் |
கடல் என்றும் பொருள். |
நீரொலித்தன்ன(மதுரைக். 369) |
|
78) நெடுநீர் |
கடல் என பொருள் படும். |
|
79)நெடுங்கடல் |
கரையடுத்த கடல் என பொருள். |
|
80)நேமி |
திவாகர நிகண்டு கடல் என்கிறது. |
|
81)பயோததி |
பாற்கடல் என பொருள்படும். |
திரைகெழு பயோததிதுயிலும் தெய்வவான் மரகதமலை (கம்பரா. திருவவ.12) |
|
82)பயோதி |
கடல் என பொருள் படும். |
பயோதிபோற் சூழ்ந்ததாமே |
(மேருமந். 1077) |
|
83)பயோநிதி |
கடல் என கூறுகிறது யாழ் அகராதி. |
|
84)பரவை |
பரந்து விரிந்த கடல். |
பாய்திரைப் பரவை மீமிசைமுகிழ்த்த (பதினொன்றாம் திருமுறை பட்டினத்து பிள்ளையார் திருக்கழு. 1) |
|
85)பரு, |
யாழ் அகராதி கடல் என்கிறது. |
|
86)பாராவாரம் |
கடல் என பொருள் படும். |
பாராவாரம் பல்வளம் பழுநியகாராளர் சண்பை (மணி. 3, 28) |
|
87)பாழி |
நிகண்டு கடல் என்கிறது. |
|
88)புணரி |
உலகு சூழ்ந்த நெடும்புணரி (திவ். பெரியதி. 8,6, 5) |
|
89)பெருங்கடல் |
|
90)பெருநீர் |
பெருநீர் போகு மிரியன் மாக்களொடு |
(சிலப். 6, 112) |
|
91)பெருவனம் |
செறிந்த பன்மணிப் பெருவனம் (கம்பரா.முதற். 246). |
|
92)பேரு |
யாழ் அகராதி சமுத்திரம் என்கிறது. |
|
93)பௌவம் |
ஆழம் மற்றும் கடல் என பொருள்படும். |
|
94)மகரசலம் |
மகரசலந்தரளந் தருவே தவனத்தன் (மறைசை. 90). |
|
95)மகரநீர் |
இனமழை மகரநீரை முடிவுற முகப்ப (கம்பரா. குகப். 49) |
|
96)மகராங்கம் |
யாழ் அகராதி கடல் என்கிறது. |
|
97)மகரி |
நிகண்டு கடல் என்கிறது. |
|
98)மகாகச்சம் |
யாழ் அகராதி கடல் என்கிறது. |
|
99)மகாசயம் |
யாழ் அகராதி சமுத்திரம் என்கிறது. |
|
100)மகான்னவம் |
யாழ் அகராதிகடல் என்கிறது. |
|
101)மகீப்பிராசீரம் |
பூமியைவேலியாக வுடையதுகடல். |
|
102)மகோததி |
மகோததி வளாவும் பூதலம் (கம்பரா. தேரேறு. 42) |
|
103)மாதங்கம் |
நிகண்டு கடல் என்கிறது. |
|
104)மாதோயம் |
மாதோயந்தன்னை வயிறலைத்து (கந்தபு. தேவரையே. 17). |
|
105)மாறாநீர் |
மாறாநீர் வையக் கணி (குறள்,707, மணக்.). |
|
106)மிருதோற்பவம் |
யாழ் அகராதி கடல் என்கிறது. |
|
107)மீரம் |
சமுத்திரம் என்கிறது யாழ் அகராதி |
|
|
|
108)மீனாலயம் |
மீன்களின் இருப்பிடமான கடல் |
|
109)முண்டகம் |
நிகண்டு கடல் என்கிறது. |
|
110)முதனீர் |
கடல் என்கிறது நிகண்டு |
|
111)முதுகயம் |
முதுகயந் தீப்பட (திவ். பெரியதி. 8, 5, 6) |
|
112) முதுநீர் |
நிலத்துக்கு முந்தியது என பெருள்படும் கடல். |
|
113)முந்நீர் |
ஆற்றுநீர், ஊற்றுநீர்,மழைநீர் என்ற மூன்று நீர்களை உடையது. |
முந்நீர் விழவி னெடியோன் (புறநானூறு 9) |
|
114)முன்னீர் |
நிலத்துக்கு முன் தோன்றியதான கடல் |
|
115)யாதபதி |
யாழ் அகராதி கடல் என்கிறது. |
|
116)வாங்கம் |
யாழ் அகராதிகடல் என்கிறது. |
|
117)வாகினீபதி |
சமுத்திரம் என யாழ் அகராதி கூறுகிறது. |
|
118)வாரகம் |
கடல்என பொருள் படும் நிகண்டு |
|
119)வாரம் |
கடற்கரையை குறிக்கும். |
|
120)வாராகரம் |
கடல் என நிகண்டு கூறுகிறது. |
|
121)வாரிதி |
எழுவாரிதி கழியப்பாய (தக்கயாகப். 269). |
|
122)வாரிநிதி |
யாழ் அகராதி கடல் என்கிறது. |
|
123)வாரிராசி |
யாழ் அகராதி கடல் என்கிறது. |
|
124)வாரீசம் |
நிகண்டு கடல் என்கிறது. |
|
125)வாருணம் |
பிங்கல நிகண்டு கடல் என்கிறது. |
|
126)விரிநீர் |
ஆழியின் மருபெயர். |
|
127)வீசிமாலி |
நிகண்டு கடல் என்கிறது. |
|
128)வீரை |
திரைவீரை (திருவிசை. திருமாளி. 3, 5). |
|
129)வெள்ளம் |
கடல் பெருக்கை குறிக்கும். |
வெள்ளந்தாழ் விரிசடையாய் (திருவாச. 3, 1). |
|
130)வேலாவலையம் |
பூமியின் எல்கை என பொருள். |
|
131)வேலை |
கடற்கரை |
பௌவவேலை (கந்தபு. மேருப். 46) |