அழகு கவிதை வரிகள் alagu kavithai varigal

sowmiya p 139 Views
2 Min Read

என் அழகு பதுமையே
தேவதை போல்
பூமியில் நீ நடந்து வர ..!!

வானத்து நிலவும்
உன் அழகில் மயங்கி
தன் அழகினை வெளியே
காண்பிப்பதற்கு
தயக்கம் கொண்டு …!!

அவசரம் அவசரமாக
ஓடி சென்று
மேகத்தின் பின்னால்
ஒளிந்துக் கொண்டதோ ..??
–கோவை சுபா

கண்ணக்குழியழகி

மார்கழி மாதத்து பனித்துளி
கோடை காலத்து வியர்வைத்துளி
இரண்டும் ஒன்று சேர்ந்து விடுதடி ஒரு சில மணித்துளி….
அதுவே ஆண்கள் முத்தம் இடும் உன் கன்னக்குழி…
– மதுரைவிசை

 

எதிர்பார்ப்பு !!!!!!!

உன்னை எதிரில் பார்த்த நாட்களை விட …
எதிர்பார்த்த நாட்களே அதிகம் ….!!!!!

இன்னும் உன்னை எதிர்பார்க்கிறேன் …
எதிரில் பார்க்க….!!!!!!

 

நிலம் அழகு நீர் அழகு
மீன் போன்ற உன் கண் அழகு!

பூ அழகு பொட்டழகு
உன் இதழ் சிந்தும் தேன் அழகு!

உடை அழகு இடை அழகு
நளினமான உன் நடை அழகு!

மண் அழகு விண் அழகு
பௌர்ணமியாய் உன் முகம் அழகு!

பகல் அழகு இரவு அழகு
கார்கூந்தலாய் உன் முடி அழகு!

கை அழகு விரல் அழகு
அதற்க்கு மகுடமாய் உன் நகம் அழகு!

மயில் அழகு குயில் அழகு
தேன் தெவிட்டும் உன் குரல் அழகு!

சினம் அழகு சிரிப்பழகு
உன் கன்னத்தில் விழும் குழி அழகு!

கவி அழகு மொழி அழகு
நீ பேசும் தமிழ் அழகு!

நெளிவழகு சுளிவழகு
உன் கால்களில் சிலம்பழகு!

நனி அழகு நகை அழகு
பொன்நகையாய் உன் சிரிப்பழகு!

அலை அழகு கடல் அழகு
கடல் போன்ற உன் மனம் அழகு!

தூண் அழகு துரும்பழகு
குறும்பான உன் குணம் அழகு!

இரவு அழகு கனவு அழகு
எனை வாட்டும் உன் நினைவழகு!

மனம் அழகு சினம் அழகு
நீ வசிக்கும் என் உள்ளம் அழகு!

நதி அழகு மதி அழகு
நீ பாடும் ஜதி அழகு!

வான் அழகு மண் அழகு
இறைவன் படைப்பில் பெண் அழகு!

என் அழகு எது அழகு
பெண் இனத்தில் நீ அழகு!

 

Share This Article
Exit mobile version