ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் பிளான் மற்றும் அதற்கான OTT நன்மைகள்

Pradeepa 2 Views
1 Min Read

ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் பிளான் மற்றும் அதற்கான OTT நன்மைகளை பற்றி பார்ப்போம். ஏர்டெல்லின் ஆண்டு ப்ரீபெய்ட் திட்டமானது Rs.2698 உடன் OTT இலவசம். இந்த திட்டம் மூலம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP உறுப்பினரின் முழு ஓராண்டு சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது..!

 

அனைத்து தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும் OTT தளங்களுடன் இணைத்து செயல்பட்டு வருகின்றனர். இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டர் ஆன ஏர்டெல்லும் (Bharti Airtel) பல ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் OTT சந்தாவை வழங்குகிறது.

 

பல OTT பயன்பாடுகளை கொண்டு உள்ள ஒரே நிறுவனம் ஏர்டெல் மட்டுமே.கூடுதலாக, ஆபரேட்டர் Zee 5 பிரீமியம் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP போன்ற OTT பயன்பாடுகளுடன் ஆயுள் காப்பீட்டு சலுகைகளையும் வழங்குகிறது. ஏர்டெல்லின் முதல் OTT பிளான் Rs.289 விலையிலான பேக், இது  ZEE5 பிரீமியம் சந்தாவை வழங்குகிறது.இந்த திட்டத்தின் மூலம் வரம்பற்ற அழைப்பு, 1.5GB டேட்டா, 100 குறும் செய்தி 28 நாட்களுக்கு வழங்குகிறது.

zee5 சந்த சேர்க்கை ஏர்டெல் தேங்க்ஸ்(airtel thanks )ஆப் மூலம் பெறலாம். கூடுதலாக, ஒரு எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா, இலவச ஹெலோடியூன்ஸ், இலவச விங்க் மியூசிக் மற்றும் FASTag-ல் ரூ.100 கேஷ்பேக் ஆகியவற்றைப் பெறலாம். பின்னர் Rs .349 பிளான் அமேசான் பிரைம் சந்தா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 குறும்செய்திகளை  28 நாட்களுக்கு வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 2GB டேட்டாவை கொண்டுள்ளது.

ஏர்டெல் டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு Rs .401 திட்டத்தையும் வழங்குகிறது. இந்த திட்டங்கள் 30GB டேட்டாவை  28 நாட்களுக்கு வழங்கும். கடைசியாக, ரூ.448 திட்டம், அதே காலகட்டத்தில் ஒரு டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சந்தா மற்றும் ஒரு நாளைக்கு 3GB டேட்டாவை  வழங்கும்.

Share This Article
Exit mobile version