தமிழில் அகர வரிசை

Vijaykumar 110 Views
6 Min Read

தமிழின் அகர வரிசை அமைந்த முறை: (1) முதலில் 12 உயிரெழுத்துகள் கொண்ட வரிசை, (2) தனி எழுத்தாகிய ஆய்த எழுத்து, (3) 18 மெய்யெழுத்துகள் கொண்ட வரிசை, (4) உயிரோடு சேர்ந்த மெய்யெழுத்துகளாகிய 216 உயிர்மெய் எழுத்துகள். எனவே மொத்த எழுத்துகள் 247.

உயிர்: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
ஆய்த எழுத்து: ஃ
மெய்: க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் ழ் ள் வ் ற் ன்.

உயிர்மெய் எழுத்துகள் வரிசை:

 

உயிரெழுத்துக்கள்

மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களை அகராதிப்படி வரிசை படுத்துவதே அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல் எனப்படும்.

முதலில் அ,ஆ,இ,ஈ என உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்த வேண்டும்.

வினா: ஒட்டகம், இலை, அரும்பு, ஊஞ்சல்

விடை: அரும்பு, இலை, ஊஞ்சல், ஒட்டகம்

மெய்யெழுத்துக்கள்

முதல் எழுத்து ஒரே எழுத்தாக அமைந்தால் அடுத்ததாக இரண்டாவதாக இருக்கும் எழுத்தை(மெய்யெழுத்து) கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.

வினா: நன்மை, நம்பகம், நல்லது, நட்சத்திரங்கள்

விடை: நட்சத்திரங்கள், நம்பகம், நல்லது, நன்மை

உயிர்மெய் எழுத்துக்கள்

உயிர்மெய் எழுத்துக்களை க,கா,கி,கீ என்றே வரிசைப்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் க,ங,ச என்ற முறையில் வரிசைப்படுத்த கூடாது.

வினா: மிருகம், முத்து, மௌனம், மதி

விடை: மதி, மிருகம், முத்து, மௌனம்

சில உதாரணங்கள்:

1. தத்தை, தண்ணீர், தந்தம், தங்கை

விடை: தங்கை, தண்ணீர், தத்தை, தந்தம்

2. கோமாளி, காலை, கலை, கொக்கு

விடை: கலை, காலை, கொக்கு, கோமாளி

3. நிதி, நான்கு, நட்பு, நேற்று

விடை: நட்பு, நான்கு, நிதி, நேற்று

4. எளிமை, ஊக்கம், இனிமை, ஆயிரம்

விடை: ஆயிரம், இனிமை, ஊக்கம், எளிமை

5. கொக்கு, கீரி, கௌதாரி, கிளி

விடை: கிளி, கீரி, கொக்கு, கௌதாரி

6. ஏணி, ஈடுபாடு, ஆசை, ஊண்

விடை: ஆசை, ஈடுபாடு, ஊண், ஏணி

7. தமிழ், படித்தல், ஊக்கம், இனிமை

விடை: இனிமை, ஊக்கம், தமிழ், படித்தல்

8. இமயம், உலகம், அன்பு, ஐவர்

விடை: அன்பு, இமயம், உலகம், ஐவர்

9. கண்டம், கண்டி, கண்டகம், கண்

விடை: கண், கண்டகம், கண்டம், கண்டி

10. எண், எடுப்பு, எண்ணம், எடை

விடை: எடுப்பு, எடை, எண், எண்ணம்

11. திரை,தளிர், துறைமுகம், தாமரை

விடை: தளிர், தாமரை, திரை, துறைமுகம்

12. கொல்லன், காவலன், அரசன், தச்சர்

விடை: அரசன், காவலன், கொல்லன், தச்சர்

13. பச்சை, பட்டம், பங்கு, பஞ்சு

விடை: பங்கு, பச்சை, பஞ்சு, பட்டம்

14. உழும், ஆடும், அடும், ஊரும்

விடை: அடும், ஆடும், உழும், ஊரும்

15. மீன், முத்து, மாங்காய், மச்சம்

விடை: மச்சம், மாங்காய், மீன், முத்து

16. காட்சி, பேறு, தெய்வம், உழைப்பு

விடை: உழைப்பு, காட்சி, தெய்வம், பேறு

17. சௌக்கியம், சுக்கு, சங்கு, சொல்

விடை: சங்கு, சுக்கு, சொல், சௌக்கியம்

18. சிறப்பு, சனி, சீற்றம், சாலை

விடை: சனி, சாலை, சிறப்பு, சீற்றம்

19. உழவன், வாணிபம், இடையன், ஊதியம்

விடை: இடையன், உழவன், ஊதியம், வாணிபம்

20. தூண்டில், தங்கம், தேர், திங்கள்

விடை: தங்கம், திங்கள், தூண்டில், தேர்

21. கை, காட்சி, கேணி, கோபுரம்

விடை: காட்சி, கேணி, கை, கோபுரம்

22. ஐயம், எழில், ஈசன், ஒளடதம்

விடை: ஈசன், எழில், ஐயம், ஒளடதம்

23. சந்திரன், திங்கள், ஞாயிறு, கதிரவன்

விடை: கதிரவன், சந்திரன், ஞாயிறு, திங்கள்

24. யோகி, நகம், வீறு, மாசு

விடை: நகம், மாசு, யோகி, வீறு

25. ஒலி, எள், இடி, அகிலம்

விடை: அகிலம், இடி, எள், ஒலி

26. பூடான், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா

விடை: கேரளா, தமிழ்நாடு, பூடான், மகாராஷ்டிரா

27. நேற்று, நவில்தல், நீலம், நோய்

விடை: நவில்தல், நீலம், நேற்று, நோய்

28. புதன், செவ்வாய், வெள்ளி, திங்கள்

விடை: செவ்வாய், திங்கள், புதன், வெள்ளி

29. கடல், கடவுள், கடமை, கடன்

விடை: கடமை, கடல், கடவுள், கடன்

30. நீதி, வழக்கு, தீர்ப்பு, சாட்சி

விடை: சாட்சி, தீர்ப்பு, நீதி, வழக்கு

31. பாண்டம், பழமொழி, பாசறை, பழிப்பு

விடை: பழமொழி, பழிப்பு, பாசறை, பாண்டம்

32. மண்ணு, மந்தி, மிதி, மண்டு

விடை: மண்டு, மண்ணு, மந்தி, மிதி

33. அதிபதி, அதிர்ச்சி, அந்தகன், அதியமான்

விடை: அதிபதி, அதியாமான், அதிர்ச்சி, அந்தகன்

34. கோவலர், சுட்டி, சவலை, சுட்டு

விடை: கோவலர், சவலை, சுட்டி, சுட்டு

35. மேகலை, மேடம், மேசை, மேடு

விடை: மேகலை, மேசை, மேடம், மேடு

36. ஒப்படை, ஒப்பம், ஒட்டு, ஒடுக்கு

விடை: ஒட்டு, ஒடுக்கு, ஒப்படை, ஒப்பம்

37. ஐவர், இறக்கம், ஓம்பல், ஊமை.

விடை: இறக்கம், ஊமை, ஐவர், ஓம்பல்

38. தப்பு, மஞ்சு, கட்டு, பட்டு, சுக்கு, நண்டு

விடை: கட்டு, சுக்கு, தப்பு, தண்டு, பட்டு, மஞ்சு

39. வாசகம், வால், வாய்ப்பாடு, வாலிபம்

விடை: வாசகம், வாய்பாடு, வால், வாலிபம்

40 புண், பிடி, பாலை, பிள்ளையார்

விடை: பாலை, பிடி, பிள்ளையார், புண்

41. ஏற்றல், உண்ணல், அன்னம், இன்னல்

விடை: அன்னம், இன்னல், உண்ணல், ஏற்றல்

42. வழங்கு, வளையம், வனப்பு, வரை

விடை: வரை, வழங்கு, வளையம், வனப்பு

43. நிறை, நீட்டம், நிறம், நினைவு

விடை: நிறம், நிறை, நினைவு, நீட்டம்

44. ஈன்றனள், இசை, அரசியல், எழுதினேன்

விடை: அரசியல், இசை, ஈன்றனள், எழுதினேன்

45. இளக்கம், இளவல். இளநீர், இளமை

விடை: இளக்கம், இளநீர், இளமை, இளவல்

46. நொறுங்கு, பண்ணை, பனி, நரை

விடை: நரை, நொறுங்கு, பண்ணை, பனி

47. அந்தாதி, உலா, இராசராசன், ஆராய்தல்

விடை: அந்தாதி, ஆராய்தல், இராசராசன், உலா

48. பேச்சு, பெயர், பை, பேரம்

விடை: பெயர், பேச்சு, பேரம், பை

49. இலங்கை, அணில், ஏணி, உலகம்

விடை: அணில், இலங்கை, உலகம், ஏணி

50. சக்கரம், குருவி, வானம்பாடி, மேளம்

விடை: குருவி, சக்கரம், மேளம், வானம்பாடி

51. மழவன், மருட்சி, மழி, மருந்து

விடை: மருட்சி, மருந்து, மழவன், மழி

52. கச்சை, கச்சி, கசடு, கங்கை

விடை: கங்கை, கச்சி, கச்சை, கசடு

53. புருவம், புனைவு, புளி, புலி

விடை: புருவம், புலி, புளி, புனைவு

54. மயில், மருகன், மல்லை, மந்திரி

விடை: மந்திரி, மயில், மருகன், மல்லை

55. எண்ணம், எண், எடுப்பு, எடை

விடை: எடுப்பு, எடை, எண், எண்ணம்

56. இலக்கணம், அத்தி, கொழுந்து, சவால்

விடை: அத்தி, இலக்கணம், கொழுந்து, சவால்

57. நல்வினை, நலம், தூது, தூணி

விடை: தூணி, தூது, நல்வினை, நலம்

58. விதி, விரை, விரதம், விரோதி

விடை: விதி, விரதம், விரை, விரோதி

59. எருது , ஆமை, ஓடம், உறக்கம்

விடை: ஆமை, உறக்கம், எருது, ஓடம்

60. கல்வி, பண்பு, சங்கம், தகைமை

விடை: கல்வி, சங்கம், தகைமை, பண்பு

Share This Article
Exit mobile version