காங்கிரஸ் கட்சியில் இணைத்த குக் வித் கோமாளி போட்டியாளர் ஷகிலா

Pradeepa 4 Views
1 Min Read

குக் வித் கோமாளி நிகழச்சியின் மூலம் பிரபலம் ஆன நடிகை ஷகீலா தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் கட்சியில் அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

நடிகை ஷகீலா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என இந்திய மொழிகள் அனைத்திலும் குறிப்பிடத்தக்க படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெறுள்ளார். தமிழில் கடைசியாக கடந்த ஆண்டு விமல் நடிப்பில் வெளியான கன்னிராசி படத்தில் நடித்து இருந்தார்.

தற்போது விஜய் டிவியின் ஹிட் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு உள்ளார். இதில் கடந்த வாரம் நடைபெற்ற ஷோவில் தோல்வியடைந்த ஷகீலா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ஷகீலா, இந்த நிகழ்ச்சி தனது நிலையை மாற்றியுள்ளதாக கூறினார். தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை கட்சியில் நடிகை ஷகீலா இணைந்த உடனே அக்கட்சியின் தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் ஷகிலாவிற்கு மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுவதாக பிறப்பித்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரேக்கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் அடுத்த மாதம் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நடிகை ஷகீலா, விரைவில் காங்கிரஸ் கட்சிக்காக மாநிலம் முழுதும் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share This Article
Exit mobile version