நடிகர் பாக்யராஜ் அவருடைய மனைவி பூர்ணிமா இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி

Pradeepa 1 View
1 Min Read

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. அரசியல், சினிமா, துறையை சார்த்த பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமா நடிகர் பாக்யராஜ் அவருடைய மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் பாகியராஜ் அவரின் ஒரே மகன் சந்தனு பாகியராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் எனது பெற்றோருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரையின் படி எனது பெற்றோர் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.

மேலும் எங்களுடன் இருந்த ஊழியர்களும் தனிமைப்படுத்திக்கொண்டனர். கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நலம்பெற வேண்டிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Share This Article
Exit mobile version