மத்திய அரசால் மருத்துவ படிப்பிற்கு நடத்தப்படும் INICET நுழைவு தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க உச்ச நிதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
எய்ம்ஸ்(AIMS), ஜிப்மர்(JIPMER) உள்ளிட்ட சில மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை(பிஜி) படிப்புகளுக்கு இனிசெட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு இனிசெட் நுழைவு தேர்வு நவம்பர் 30 ஆம் தேதி ஆன்லைன் மூலம் நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த மே 27 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
பிஜி படிப்பிறகான இனிசெட் நுழைவு தேர்வு ஜூன் 16 ஆம் தேதி நடைபெற இருந்தது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு இனிசெட் நுழைவு தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்கவேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு பிறகு கொரோனா பரவல் நிலையை பொறுத்து இனிசெட் நுழைவு தேர்வுகள் நடைபெறுவதற்க்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று உச்சநீதிமன்றம் சார்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.