இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் 18 சுகாதார ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்வி தகுதி, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும், உடல்நலம் மற்றும் சுகாதார பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விளம்பர எண்.03/2021
நிறுவனம்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
பணியிடம்: நெய்வேலி, தமிழ்நாடு
பணியின் பெயர் : சுகாதார ஆய்வாளர்
மாதச் சம்பளம்: ரூ.38,000
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மொத்த காலியிடங்கள்: 18
கல்வித் தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் உடல்நலம் மற்றும் சுகாதார பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தமிழில் எழுத, பேச படிக்க தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ www.nlcindia.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.06.2021
மேலும் முழுவிவரங்கள் அறிய https://www.nlcindia.in/new_website/careers/Health%20Inspector%20FTE%20Advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.