தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தற்போது முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதங்களில் செலுத்த வேண்டிய மின்கட்டணத்தை மே 31ஆம் தேதி வரை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.
தற்போது இதற்கான கால அவகாசம் ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வெளியிட்டுள்ள அறிக்கையில் தாழ்வழுத்த மின் நுகர்வோர்களின் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் மே 10 முதல் மே 31ம் தேதி வரை இருந்தது. தற்போது இதற்கான கால அவகாசம் ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.
2021 ஆண்டு ஏப்ரல் மாத மின் கட்டணம் செலுத்தாத உயர் மின்னழுத்த மின் இணைப்புகளுக்கு தாமதக்கட்டணத்துடன், மின் துண்டிப்பின்றி காலநீட்டிப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சிறு, குறு மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோவருக்கான கூடுதல் வைப்புத் தொகை, கேட்புத் தொகை செலுத்த ஜூன் 15 வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.