கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் இவர் அடுத்த இரண்டு நாட்கள் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்வதாகவும் கூறினார்.
கருப்பு பூஞ்சை தொற்று குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறினார். தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமைப்படுத்திய இரண்டு நாட்களில் தொற்று எண்ணிக்கை குறைத்து உள்ளதாக அவர் கூறினார்.
தமிழகத்தில் இதுவரை கருப்பு புஞ்சை நோயால் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கருப்பு பூஞ்சை தொற்று குறித்து அடுத்த இரண்டு நாட்களில் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக சுகாதார துறை அமைச்சர் கூறினார்.