நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல சிறந்த முயற்சிகள் எடுத்தாலும், தற்போது மியூகோமிகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தொற்று காரணமாக மற்றொரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைபவர்கள் அல்லது குணமடைந்தவர்களிடம் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. நிரிழிவு நோயாளிகளுக்கு, எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்நோய் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்டிராய்டு என்ற மருந்தை எடுத்து கொள்கிறார்கள். இந்த மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிரிழிவு நோயாளிகள் உட்கொள்ளும் போது இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, இவர்களை கருப்பு பூஞ்சை என்ற நோய் தாக்கும் அபாயம் உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.
கருப்பு பூஞ்சை யாரை தாக்கும்?
- நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் கருப்பு பூஞ்சை தாக்கும்.
- ஸ்டிராய்டை தவறான அல்லது அதிகமாக பயன்படுத்தினால் கருப்பு பூஞ்சை தாக்கும்.
- கொரோனாவில் இருந்து மீண்டவர்களை கருப்பு பூஞ்சை எளிதில் தாக்குகிறது.
கருப்பு பூஞ்சை நோய் கண்களில் ஏற்பட்டு நரம்புகளை பாதிக்கும். நரம்பு மூலமாக மூளையையும் பாதிக்கும். அதனால் இந்நோய் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறவேண்டும். கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகமானால் உயிரிழப்பு ஏற்படலாம், நோய் பாதிப்பு குறைவாக இருக்கும் போதே சிகிச்சை பெறுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.