- Advertisement -
Homeசினிமா1000 படங்களின் ஐஎம்டிபி தரவரிசையில் சூரரை போற்று 3 ஆம் இடம்

1000 படங்களின் ஐஎம்டிபி தரவரிசையில் சூரரை போற்று 3 ஆம் இடம்

- Advertisement -

சுதா கொங்கராவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் கடந்த ஆண்டு அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியானது. நடிகர் சூர்யாவின் 38 வது திரைப்படம். இந்த திரைப்படத்தில் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ஊர்வசி, கருணாஸ், விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் அவரின் சுயசரிதையை மையமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சினிமா தகவல்களை உள்ளடக்கிய புகழ்பெற்ற இணையதளம் ஐஎம்டிபி. 1000 படங்களின் ஐஎம்டிபி தரவரிசையில் சூரரை போற்று திரைப்படம் அதிக புள்ளிகள் பெற்று 3 வது இடத்தை பிடித்துள்ளது. 9.1 புள்ளிகளை பெற்று ஷஷாங்க் ரிடம்ப்ஷன் முதல் இடத்திலும், காட்பாதர் திரைப்படம் இரண்டாம் இடத்திலும், சூரரை போற்று திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

1000 திரைப்படங்களின் ஐஎம்டிபி தரவரிசையில் முதல் 60 திரைப்படங்களின் பட்டியலின் 4 தமிழ் திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

3 – சூரரை போற்று
34 – ராட்சசன்
58 – விக்ரம் வேதா
60 – டங்கல்

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -