ஹைலைட்ஸ்:
- அதிமுக சார்பில் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதிமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களின் ஒருமாத ஊதியம் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.
- முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு பலரும் நிதி அளித்து வருகின்றார்கள்.
அதிமுக சார்பில் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அதிமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களின் ஒருமாத ஊதியம் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்றும் அக்கட்சி தலைமை அறிவித்து இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பொருளாதாரத்தை மீண்டெழுவதற்கும், கொரோனா பேரிடரை எதிர்கொள்ளவும் தங்களால் முடிந்த உதவியை செய்யவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு பலரும்நிதி அளித்து வருகின்றார்கள்.
இந்நிலையில் தற்போது முதல்வர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும் ,உரிய நிவாரணங்களை தரவும் அதிமுக சார்பில் தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் அதிமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியமும் கொரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.