நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ரெம்டெசிவர் தடுப்பு மருந்து சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்து உள்ளது. சென்னை உள்பட 6 மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்ய தடை விதித்துள்ளது.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்து வழங்கும் முறையை மேம்படுத்த தமிழக முதல்வர் தலைமையில் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ரெம்டெசிவர் தடுப்பு மருந்து நாளை முதல் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெம்டெசிவர் தடுப்பு மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதால் மக்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.