கொரோனா வைரஸானது கடத்த மார்ச் மாதம் தொடங்கி இன்று வரை தமிழகத்தை ஆட்டிப்படைத்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் எதிர்காலத்தை நோக்கி பயணத்தை மேற்கொள்ளும் பள்ளி மாணவர்களின் வாழ்கை கேள்விக்குறியாகியுள்ளது. கடத்த வருடத்தின் இறுதியில் கொரோனா தொற்றானது குறைத்து வந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது.
மீண்டும் இந்த வைரஸின் பாதிப்பு அதிகரித்து வந்ததும் பள்ளிகள் மூடப்பட்டு இணையதளத்தின் வாயிலாக வகுப்புகள் நடத்திவந்தன. இந்த கல்வி ஆண்டுக்கான மதிப்பெண்கள் பெற மாணவர்களுக்கு தேர்வுகள் வைக்கவேண்டும்.
புதிய கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான தேதி மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிப்போடப்பாடுமே தவிர ரத்து செய்யப்படாது என்று தெரிவித்தார்.
முதல்வருடன் ஆலோசனை செய்து அதன்பின் 12-ம் வகுப்பிற்கு எப்போது பொதுத்தேர்வு நடத்தப்படும் என்பது குறித்து முடுவுகள் எடுக்கப்படும்.
இதனை குறித்து அதிகாரிகள் வலியுறுத்தியதாவது,15 நாள்கள் அல்லது ஒரு மாதத்திற்கு முன்பாக்கவே பொதுத்தேர்வின் தேதியை அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த ஆலோசனையானது தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், கல்வியாளர்கள், அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொன்றனர்.