- Advertisement -
SHOP
Homeசெய்திகள்சர்வதேச உலக தொழிலாளர் தினம்

சர்வதேச உலக தொழிலாளர் தினம்

- Advertisement -

என் தந்தை, தாய், சகோதரன் எனது உறவினர்கள் என அனைத்து சொந்தங்களுக்கும் இந்த மே தினமான தொழிலாளர்தினத்தின் வாழ்த்துக்களை இந்த செய்தியின் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன்.

செய்யும் தொழிலே தெய்வம், உழைக்கும் மக்களின் உன்னதமான தினம் என்றும் உழைக்கும் கரங்களை போற்றி பாடும் தினமாகும். நாம் செய்யும் தொழிலை தெய்வமாக கொண்டாடும் தினம் இன்று.

இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை ஒரு தொழிலை நாடி செல்லவேண்டிய நிலைமை உள்ளது.வாழ்க்கையின் படிநிலைகளை கடந்து செல்லவேண்டும் என்றால் கையில் ஒரு தொழில் இருக்கவேண்டும்.இந்த நிலையில் உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்று ஒரு முக்கிய நாளாகவும் அவர்களின் மேன்மையை போற்றி முழங்கும் தினமாகவும் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்த தேசம் முழுவதும் 8 மணி நேரம் மட்டுமல்லாமல் 24 மணி நேரமும் உழைக்கும் மக்களுக்கு உரித்தான நாளாக இந்த மே தினம் உள்ளது. விவசாயிகள் முதல் உலகின் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் தனது உழைப்பின் மூலம் முன்னேறி வருகின்றனர்.அவர்களை ஒரு படி பெருமையாக கொண்டாடும் தினமாகும். தான் வயிற்றின் பிழைப்பிற்காக உழைக்கும் அனைத்து தொழிலாளர்களை வணங்கும் நாளாக இந்த நாள் உள்ளது.பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேர ஓய்வு ஆகியவற்றை குறிப்பதாகும்.

இந்தியாவில் 1927 ஆம் ஆண்டு மே முதல் நாளில் இருந்து தொழிலாளர்தினம் அனுசரிக்கத் தொடங்கப்பட்டது. தொழிலாளர்களின் உரிமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக இந்த நாள் கொண்டாடி வருகிறது.

உழைக்கும் தொழிலாளர்களை சிறப்பிக்கும் நாளாகவும், உழைக்கும் தொழிலாளர்களை சிறப்பித்து உலகிற்கு பறைசாற்றும் தினமாக எந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.பொதுநலத்திற்காக உழைக்கும் தொழிலாளர்களுக்கும், உழைப்பாளர்கள் தங்களின் உரிமையை பெரும் நாளாகவும் இந்த நாள் உள்ளது.

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -