- Advertisement -
Homeசெய்திகள்சச்சின் டெண்டுல்கர் ஆக்சிஜன் கிடைக்க ரூ.1 கோடி நிதியுதவி!

சச்சின் டெண்டுல்கர் ஆக்சிஜன் கிடைக்க ரூ.1 கோடி நிதியுதவி!

- Advertisement -

ஹைலைட்ஸ்:

  • ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்வதற்க்கு “மிஷன் ஆக்சிஜன் ” என்ற நிறுவனம் அறிமுகம்.
  • மிஷன் ஆக்சிஜன் நிறுவனத்திற்கு சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடி நிதியுதவி
  • தொற்றுநோயை எதிர்த்து நிற்க கடுமையான போராட்டமும் உழைப்பும் தேவை.

இந்தியா முழுவதும் ஆக்சிஜன் செறிவூட்டி சாதனங்களை இறக்குமதி செய்வதற்கும், கொரோனாவுடன் போராடும் மருத்துவமனைகளுக்கு அவற்றைக் கிடைக்கச் செய்வதற்கும் “மிஷன் ஆக்சிஜன்” என்ற நிறுவனம் உதவி வருகிறது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பெரும் சுகாதார சீரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால்,மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிவருகிறது.

இதன் விளைவாக “மிஷன் ஆக்சிஜன்” என்னும் நிறுவனத்திற்கு, இந்தியா முழுவதும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்வதற்கும், கொரோனாவுடன் போராடி வரும் மருத்துவமனைகளுக்கு அவற்றைக் கிடைக்கச் செய்வதற்கும் சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார்.

இந்த சூழலில், மிஷன் ஆக்ஸிஜன் திட்டமானது, 250-க்கும் அதிகமான இளம் தொழில்முனைவோர் குழு, ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்வதற்கும், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு நன்கொடை அளிப்பதற்கும் நிதி திரட்டுவதற்காக இந்த திட்டமானது அறிமுகப்படுத்தியுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், “மிஷன் ஆக்ஸிஜன் திட்டத்தில் நானும் பங்காற்றியுள்ளேன். இத்திட்டத்தில் உள்ளவர்களின் முயற்சி விரைவில் இந்தியா முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளுக்கு சென்றடையும் என்று நம்புகிறேன். நம் இந்திய மக்கள் ஆக்ஸிஜன் இன்றி தவித்து வருவது எனக்கு மிகப்பெரிய வலியை தருகிறது” என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவிற்காக நான் விளையாடும் போது நீங்கள் எனக்கு கொடுத்த அன்பும் ஆதரவும் விலைமதிப்பற்றது. அது எனக்கு வெற்றி அடைய உதவியது. அதேபோல், இன்று இந்த தொற்று நோயை எதிர்த்து நிற்க கடுமையான போராட்டமும் உழைப்பும் தேவை, எனவே நாம் அனைவருக்கும் ஒன்றிணைந்து நின்று கைக்கோர்க்க வேண்டும்’ என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -