- காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி கொரோனா அதிகமாக பரவிவரும் 12 மாநில முதலமைச்சர்கைகளுடன் கலந்தாய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
- கொரோனாவானது இந்தியாவில் இரண்டாவது கட்டமாக பரவிருக்கின்ற காரணத்தினால் தற்போது கொரோனா பாதிப்பு தினசரி ஒரு லட்சத்தைக் கடந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது.
- அந்த வகையில் நேற்றுமட்டும் 1.15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்து இருப்பது தெரியவந்துள்ளது.
- டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவலின் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- மேலும் இதனால் இரவு நேர ஊரடங்காக டெல்லி, பஞ்சாப், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
- தமிழகத்திலும் பாதிப்பு தினசரி 5 ஆயிரத்தை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையால், இதனை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- இதனை தொடர்ந்து முழு ஊரடங்கு போடும் நிலையமை குறித்து மோடி இன்று காணொலி காட்சி மூலம் பனிரெண்டு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளார்.