தமிழகம் முழுவதும் சட்ட மன்ற தேர்தல் களத்தில் அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க. எம்.பி. கனிமொழி கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள புவனகிரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீரப்பாளையம் அண்ணா சிலை அருகே திமுக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
சுமார் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கனிமொழியின் பிரசாரத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் அதிக கூட்டம் காரணமாக மருத்துவமனை செல்ல முடியாமல் நின்று கொண்டிருந்தது.
ஆம்புலன்ஸ் வாகனம் நிற்பதை கவனித்த கனிமொழி உடனடியாக தனது பிரசாரத்தை நிறுத்தி விட்டு தொடந்து ”ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடுங்கள்” என்று கூட்டத்தினரிடம் கேட்டுக் கொண்டார். கனிமொழி ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு வசதியாக மக்களை ஒழுங்குபடுத்தினார். இதனையடுத்து எந்த தடையும் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு இருந்து சென்றது.
ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்த கனிமொழியின் இந்த செயல் அங்கு சூழ்ந்து இருந்த பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.